வைகோவை அடையாளம் கண்டு புன்னகைத்த கருணாநிதி
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தன்னை சந்திக்க வந்த வைகோவை அடையாளம் கண்டு புன்னகைத்தார் திமுக தலைவர் கருணாநிதி.
சென்னை: கோபாலபுரம் வீட்டில் தன்னை சந்திக்க வந்த வைகோவை அடையாளம் கண்டு கொண்ட கருணாநிதி புன்னகையோடு வரவேற்றார்.
முதுமை காரணமாக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக திமுக தலைவர்கருணாநிதி ஓய்வெடுத்து வருகிறார். அவரை அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். தன்னை சந்திக்க வரும் அரசியல் தலைவர்களைப் பார்த்து புன்னகைக்கிறார் கருணாநிதி.

தி.மு.க தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரிக்க ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோபாலபுரம் சென்றார். வைகோவை தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.
அதே மகிழ்ச்சியோடு அவர் கருணாநிதியைச் சந்தித்தார். அவரது உடன் நலன் குறித்து, ஸ்டாலின் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தார். வைகோ வந்திருப்பதை கருணாநிதியிடம் கூறினார் ஸ்டாலின். இதனையடுத்து தலையை சற்றே தலையை தூக்கிப் பார்த்த கருணாநிதி, புன்னகைத்தார்.
வயது முதிர்வு அவரது பேச்சைத்தான் சற்றே தடுத்திருக்கிறது. ஆனால் அவரது அபார நினைவாற்றலை தடுக்கவில்லை என்பதை இந்த புன்னகையே உணர்த்திவிட்டது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கருணாநிதியும் வைகோவும் சந்தித்து பேசியுள்ளனர். இது உணர்ச்சிகரமான சந்திப்பாகவே அமைந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications