Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்பவும் சொல்றேன், நீ பேனா வெச்சா.. "சுத்துது சக்கரம்".. ஆமா, இங்க மீன் சந்தை எங்கே? பொங்கிய சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியபோது, மீண்டும் கருணாநிதி பேனா சிலை குறித்த விவகாரத்தை கிளப்பினார். இது திமுகவை கடுப்பாக்கி வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது.. மெரினா கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில், தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமான் பேச துவங்கினார்.. அப்போது கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் கூச்சலிட்டு, அவரை பேச்சை நிறுத்தும்படி சொன்னார்கள்..

Karunanidhi: Seeman slams dmk government and says about Karunanidhi Marina Pen Statue issue again

அதற்கு சீமான், "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேணும்னா, அறிவாலயத்தில் போய் வையுங்கள்... நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பாங்களாம். சும்மா மீனவ சங்கம் என்ற பெயரில், அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு.

காசு எங்கே உனக்கு: நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன். பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது? நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? பேனா நினைவு சின்னம் வைக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதை ஏற்கிறோம். கடலில் வைக்கக் கூடாது. நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி" என்று சீறியிருந்தார் சீமான்.

வாய்ப்பூட்டு: இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு சீமான் ஒரு நிகழ்ச்சியில்போது, "கடலை கடலாக வைத்திருக்காங்க? வள்ளுவர் சிலையை இதனுடன் ஏன் ஒப்பிடறாங்க? வள்ளுவர் சிலையை இயற்கையாக அமைந்த பாறை மீது வைத்தார்கள்.. ஆனா இதுக்கு அப்படியில்லை.. நீ அரை ஏக்கரில் செயற்கையாக ஒரு பாறையை உருவாக்கணும்.. கற்களை கொண்டு போய் கொட்டணும்.. மண்ணை கொட்டணும்.. கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர்கள் என்னாவது? உலகத்துல யாருமே எழுதாததை அப்படியென்ன அந்த பேனா எழுதிடுச்சு? 134 பேனா வெச்சு அதில யார் எழுதறது?

ஆகப்பெரும் அறிவாளிகள் கிட்ட நாம மாட்டிக்கிட்டு படற பாடு இருக்கே.. காது வழியே மூளை வழியுது.. அதை துடைக்க ஆள் இல்லாம அலையறாங்க.. பெரிய சிக்கல் இது.. அன்னைக்கு இந்த கடல்சார் பிரச்சனையைதான் சொல்ல போனேன்.. ஆனால், பேசாதேன்னு சொல்றாங்க.. நான் யாரு? எப்பேர்ப்பட்டவரின் மகன் என்றுகூட தெரியாமல் சொல்றாங்க.. "போடா.. லட்சம் துப்பாக்கியை கடந்து போனவன் நான்.. உனக்கென்ன பிரச்சனை.. அந்த பயம் இருக்கட்டும் உனக்கு.. இப்பவும் சொல்றேன், நீ பேனா வெச்சால், நான் உடைப்பேன்..

Karunanidhi: Seeman slams dmk government and says about Karunanidhi Marina Pen Statue issue again

சக்கரம் சுத்துது: கீழே இருக்கிற சக்கரம் மேலே போகும், மேலே இருக்கிற சக்கரம் கீழே வரும்.. இன்னைக்கு மேலே இருக்கிற நீ, ஒருநாள் கீழே போவே தம்பி.. கீழேயிருக்கிற நான் ஒருநாள் மேலே போவேன் தம்பி.. அப்பறம் நீ என்ன ஆவேன்னு நினைச்சு பாரு தம்பி.. பார்த்துக்கோ தம்பி.. டோட்டலா எல்லாருக்கும் சிறப்பு முகாம்தான்.. ஸ்பெஷல் கேம்ப்.. அதுல ஒரு மாற்றமும் கிடையாது.. கடல் கடலாக இருக்கணும்.. குப்பை மேடு கிடையாது அது" என்றார் சீமான்.

பேனா சிலை: செய்தியாளர்களிடம் பேசிபோது, "இங்கு வெறும் குடையை வைத்து கொண்டு மீன் விற்கும் கடைகளை மக்கள் நடத்தி வருகின்றனர். பக்கத்தில்தான் கடல்.. அதிலிருந்து படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்கள் இங்கு தான் இருக்கின்றன. இந்த இடத்தில் கடைகள் போடப்பட்டுள்ளன. இதை காலி செய்ய வேண்டிய தேவை எங்கு வந்தது? நான் கடற்கரையில் மீன் விற்கக் கூடாது என்றால், கடலுக்குள் நீங்கள் பேனா வைக்கலாமா என்றால் அதற்கு பதில் இருக்கிறதா?

கடலோரத்தில் மீனவர்கள் கடை போடக் கூடாது என்று சொன்ன நீதிமன்றம் தான், சமாதியை வைத்து கொள்ளலாம் என தீர்ப்பு வழங்கியது. எங்களின் வாழ்வாதாரமே இங்கு தான் உள்ளது. இதை விட்டு விட்டு மீன் சந்தை கட்டி தருகிறோம் என்றால் எங்கே? எப்போது? பேனா சின்னம் அமைப்பதில் காட்டும் ஆர்வத்தை ஏன் எங்களுக்கு சந்தை கட்டுவதில் காட்டவில்லை. எங்களின் வாழ்விடத்திற்கு அருகில் சந்தை இருந்தால் தான் மீன்களை கொண்டு வந்து விற்க எளிதாக இருக்கும்.

Karunanidhi: Seeman slams dmk government and says about Karunanidhi Marina Pen Statue issue again

அதை விட்டு விட்டு தொலைதூரத்தில் கட்டி கொடுத்தால் போக்குவரத்து செலவிற்கு காசை கொடுத்து விட்டு வெறுங்கையை வீசிக் கொண்டு வர வேண்டியது தான். இந்த மக்கள் மீன் விற்பதால் யாருக்கு என்ன இடையூறு வந்தது என்று சொல்லுங்கள். வட மாநில தொழிலாளர்கள் பாவம். பிழைத்து கொள்ளட்டும் என்று சொன்னவர்கள், நம்முடைய மக்களுக்காக கொஞ்சம் இறங்கி வாருங்கள். ஏன் யாருமே வரவில்லை. மாண்புமிகு நீதியரசர் இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்வாதாரம்: நீதி கிடைக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கு தொடரப்படும். மனிதர்களின் உணவுத் தேவையில் 33 சதவீதம் கடலும், அங்குள்ள மீன்களும் தான் நிர்ணயம் செய்கிறது. மிகப்பெரிய விவசாயம் கடல் விவசாயம் தான். இதில் ஈடுபடும் எங்கள் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நடந்து கொள்வது நல்ல ஆட்சியாளர்களின் செயல் அல்ல என்று கூறினார் சீமான்..,. தொடர்ந்து பேனா சிலைக்கு சீமான் கண்டனம் தெரிவித்து வருவதை, திமுக தரப்பு உற்றுகவனித்து வருகிறது.

இதையடுத்து சீமான், இடஒதுக்கீடு குறித்த பேச்சை ஆரம்பித்தார்.. கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்ன இடஒதுக்கீடு கொடுத்தார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர், அவர்களும் பிற்படுத்தப்பட்டவர்கள் தானே? என்றார். அப்போது, குறுக்கிட்ட சீமான், கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு இருக்கா, இல்லையா? என்று கேட்டார்.

தொடர்ந்து செய்தியாளர் கேள்வி கேட்க, "நான் கேட்ட கேள்விக்கு முதல்ல பதில் சொல். பிறகு நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்று பேசிக்கொண்டிருந்தபோது "ஏய்" என்று செய்தியாளரை நோக்கி கைநீட்டி பேசினார் சீமான். அப்போது, செய்தியாளர், "ஏய்" என்று சொல்லாதீங்க சார்" என்று சொன்னார்.. இதைக்கேட்டதும் சீமான், "ஏய்-ன்னு சொல்லாமல் "ஓய்"-ன்னு சொல்லவா? "போடா" என்றார்.. இப்படி திடீரென ஒருமையில் "போடா" என்றதுமே, செய்தியாளர்கள் அதிர்ந்தனர்.. சீமானின் இந்த பேச்சும் செய்தியாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+