பாலாறுக்காக அறிக்கைவிட்டது பாவகரமான காரியமா?: ஜெ.க்கு கருணாநிதி கேள்வி
சென்னை: பாலாறு விவகாரத்தில் சீமாந்திரா முதல்வர் சந்திரபாபுவை விமர்சித்த தம்மை முதல்வர் ஜெயலலிதா விமர்சித்திருப்பது ஏன் என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டப் போவதாக சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். இதைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு பதிலாக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியை கடுமையாக சாடியிருந்தார். முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதிலளித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பாலாறு நதி நீர் பிரச்சினை பற்றி புதிய சீமாந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பேசிய கருத்தினையொட்டி, 21.-6.-2014 அன்று ஓர் அறிக்கை அவருக்கு விளக்கமளித்து நான் கொடுத்திருந்தேன். அதே பாலாறு பிரச்சினைக்காக தமிழக முதல் - அமைச்சர் ஜெயலலிதா இன்றைய தினம் ஒரு நீண்ட அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையில் எப்போதும் போல, நான் கொடுத்த அறிக்கை பற்றி விமர்சனம் செய்திருக்கிறார்.

ஜெ.வை விமர்சிக்கலையே..
நான் கொடுத்த அறிக்கை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறிய கருத்துக்குப் பதில். அதிலே ஒரு இடத்திலே கூட தமிழக முதல் - அமைச்சர் ஜெயலலிதா பற்றியோ, தமிழக அ.தி.மு.க. அரசு பற்றியோ ஒரு வார்த்தை கூட விமர்சித்துக் கூறவில்லை.

எடுத்த எடுப்பிலேயே காட்டம்
ஆனால் முதல் - அமைச்சர் அறிக்கையின் முதல் வாக்கியமே, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது உறவுக்கு கை கொடுப்பதும், ஆட்சி அதிகாரம் இல்லாதபோது உரிமைக்குக் குரல் கொடுப்பது போல் நடிப்பதும், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கை வந்த கலை என்று கூறியிருக்கிறார்.

அன்று நடந்தது என்ன?
காவிரி பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் எந்த நடவடிக்கையும் நான் எடுக்கவில்லை என்று பாலாறு பற்றி ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையிலே எப்போதும் போல குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும் ஜெயலலிதா தனது அறிக்கையில் 2006ஆம் ஆண்டுக்குப் பின், ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பிரச்சினையை எழுப்பிய போது, எதிர்க் கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, அதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தி.மு.க. அரசை, வலியுறுத்தியதாகச் சொல்லியிருக்கிறார்.

பாவகரமான காரியமா?
தி.மு.க ஆட்சியிலே இருந்த போது, ஜெயலலிதா இதே பாலாறு பிரச்சினைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அறிக்கை விடலாம். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியிலே இருக்கிற போது பாலாறு பிரச்சினைக்காக நான் அறிக்கை விட்டது பாவகரமான காரியமா? தமிழ்நாட்டு மக்கள், பத்திரிகையாளர்கள், கற்றறிவாளர்கள் இதிலே என்ன நியாயம் உள்ளது என்பதை தயவுசெய்து சிந்தித்துப்பார்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஜெ. ஆலோசித்தாரா? கடிதம் அனுப்பினாரா?
பாலாற்றில் அணை கட்டுவது பற்றி சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய செய்தி பத்திரிகைகளில் வந்தவுடன், ஜெயலலிதா அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்ததாகவும், மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளர் 20.6.2014 அன்று இதுகுறித்து கடிதம் எழுதியிருப்பதாகவும் ஜெயலலிதா இன்றைய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
அவர் அரசு அதிகாரிகளிடம் பேசியது பற்றியோ, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது பற்றியோ இந்த அறிக்கை வெளிவரும் வரை எந்தப் பத்திரிகையிலாவது செய்தி வெளியிடப்பட்டதா?

நான் அறிக்கைவிட்ட பின்னர்தான்..
ஆனால் அதே பிரச்சினைக்காக நான் விடுத்த அறிக்கை தான் ஏடுகளில் வெளி வந்தது. அந்த அறிக்கை வெளிவந்த பிறகு தான் முதலமைச்சர் அவசர அவசரமாக நீண்ட அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இந்தி மொழி பிரச்சினையிலே கூட கடந்த வாரம் நான் அறிக்கை விடுத்து, மத்திய அரசும் நடவடிக்கை எடுத்த பிறகு, அது பற்றி தெரிந்து கொள்ளாமலேயே முதலமைச்சர் ஜெயலலிதா அறிக்கை விடுத்தார்.

என்னாச்சு காவிரி?
காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமை தன்னால் தான் நிலை நாட்டப்பட்டது என்று அவருடைய அறிக்கையில் தனக்குத் தானே ஜெயலலிதா பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறார். நடுவர் மன்றம் தெரிவித்த காவேரி மேலாண்மை வாரியம் கூட இன்னும் அமைந்த பாடில்லை. காவேரியில் கடந்த மூன்றாண்டு காலமாக நீர் வரவும் இல்லை. குறுவைப் பாசனம் நடக்கவும் இல்லை. இன்றைக்கு ஜூன் 23-ம் தேதி, ஜூன் 12-ம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இன்று வரை திறக்கப்படவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டுமென்று பல தரப்பிலும் கேட்டுக் கொண்டும் அதைக் காதிலே போட்டுக் கொள்ளவில்லை.
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications