சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம் என்ற கருத்து கணிப்பை உறுதிப்படுத்த வேண்டும் - கருணாநிதி
திருவாரூர்: வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம் என்ற என்ற கருத்து கணிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று திருவாரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் திருவாரூர் தெற்கு வீதியில் இன்று மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக தலைவர் கருணாநிதி பேசியது:

கடந்த சில காலங்களாக கூட்டங்களில் பேச முடியாத சூழல் இருந்தது. ஆனால் திருவாரூர் வந்தால் பேசித்தான் ஆக வேண்டும். திருவாரூர் வந்தால் என்னை பேச வைத்து விடும் என்று கூறினார்.
மேலும் கூட்டத்தில் அவர் பேசுகையில், தமிழை காக்க, தமிழர் நலன் காக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது. வீரர்களின் அடையாள விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தமிழகத்தில் தடை விதித்துவிட்டார்கள். ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி தமிழக அரசு வாதாடவும் இல்லை போராடவும் இல்லை.
200 ஆண்டு பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடத்திட தமிழர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஜல்லிக்கட்டு தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். வீர விளையாட்டை வேண்டாம் என்று கூறுபவர்கள் தமிழர்கள் இல்லை.
தமிழர்களை கோழையாக்கும் செயல் தமிழ்நாட்டில் இன்றைக்கும் இருக்கிறது. விரைவில் அந்த கூட்டத்தை வீழ்த்த வேண்டும். தமிழனை கோழையாக்கினால் தான் அடக்கி ஆள முடியும் என சிலர் சதி செய்கிறார்கள். கோணல் புத்திக்காரர்களை வீழ்த்த பகுத்தறிவை பயன்படுத்தி தமிழர்களை ஒடுக்க நினைத்து செயல்படுவோரை வீழ்த்த முடிவெடுங்கள்.
வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போகிறோம் என்ற கருத்து கணிப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு கருணாநிதி உரையாற்றினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications