வெள்ளப் பாதிப்பு குற்றச்சாட்டுகளுக்கு அ.தி.மு.க. அரசின் பதில் என்ன? கருணாநிதி கேள்வி
சென்னை: வெள்ளப் பாதிப்புகள் குற்றச்சாட்டுகளுக்கு அதிமுக அரசின் பதில் என்னவென்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
விலை மதிப்பில்லா உயிர்கள் எத்தனை பலியாகி உள்ளன? வெள்ளத்தால் உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை என்ன? எவ்வளவு பெரிய பொருள் இழப்பு எத்தனை லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளது? சொந்த வீடுகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறி ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளைப் போல் அலைக்கழிக்கப் பட்டதற்கு யார் காரணம்?

டைம்ஸ் ஆப் இந்தியா" இன்று எழுதியுள்ள தலையங்கத்திற்கு தலைப்பே, "Man Made Calamity - Humanitarian crisis caused by floods in Chennai could have largely been prevented" (மனிதரால் ஏற்படுத்தப் பட்ட பேரழிவு - சென்னை மாநகரில் மக்களிடையே வெள்ளத்தினால் ஏற்பட்ட அவலத்தைப் பெருமளவுக்குத் தவிர்த்திருக்க முடியும்) என்பதாகும்.
"இந்து", "டைம்ஸ் ஆப் இந்தியா" போன்ற ஆங்கில இதழ்கள் எந்தக் கட்சியையும் சாராதவை. சென்னையில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி, அவைகளில் வெளிவந்துள்ள இந்தப் பெரிய குற்றச்சாட்டுக்கு அ.தி.மு.க. அரசின் பதில் என்ன? விலை மதிப்பில்லா உயிர்கள் எத்தனை பலியாகி உள்ளன? வெள்ளத்தால் உயிரிழந்தோரின் உண்மையான எண்ணிக்கை என்ன? எவ்வளவு பெரிய பொருள் இழப்பு எத்தனை லட்சம் பேருக்கு ஏற்பட்டுள்ளது? சொந்த வீடுகளை விட்டு குடும்பத்துடன் வெளியேறி ஆயிரக்கணக்கானவர்கள் அகதிகளைப் போல் அலைக்கழிக்கப் பட்டதற்கு யார் காரணம்? மாநில நிர்வாகத்தில் இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்?
சென்னை மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் திரு. எஸ். ஜனக ராஜன் கூறும்போது, "செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவதைத் திறமையாகக் கையாண்டிருந்தால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதையும், இழப்பையும் தவிர்த்திருக்கலாம். செம்பரம்பாக்கத்தில் 33,500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தால் கூட, அந்தத் தண்ணீர் சைதாப்பேட்டைக்கு வரும் போது வழியில் இருக்கும் பிற நீர் நிலைகளின் காரணமாக, அது 60,000 கன அடியாக அதிகரித்து விடும். இதைக் கணக்கிடுவதற்கு நிர்வாகம் தவறி விட்டது. மாநில நிர்வாகம் செய்த தவறுக்கான விலையை துரதிருஷ்டவசமான மக்கள் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்திருப்பது புறக்கணிக்கக் கூடிய கருத்து அல்ல. என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications