காலையிலேயே வாக்களித்த கருணாநிதி, தமிழிசை சவுந்தரராஜன், சீமான்
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் வாக்குப்பதிவு துவங்கியதும் வாக்களித்தனர்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர மீதமுள்ள 232 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அந்த இரண்டு தொகுதிகளிலும் வரும் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியவுடன் திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள சாரதா நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
இதே போன்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி உயர்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் காலையிலேயே வாக்களித்தார். வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், மக்கள் அனைவரும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
சென்னை சாலிகிராமம் சேவா சமாஜம் பள்ளியில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாக்களித்தார். சட்டசபை தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications