கட்டட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம்- கருணாநிதி
சென்னை: சென்னை கட்டட விபத்துக்கான காரணத்தை நன்கு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, இதுபோன்ற அதிர்ச்சித் தரத்தக்க கொடும் சம்பவங்களை கட்டாயம் தவிர்த்திடத் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரண நிதி உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

28-6-2014 அன்று சென்னை - போரூர் அருகே 11 மாடிக் கட்டிடம் முழுவதும் இடிந்து சரிந்து விழுந்ததில், இதுவரை 11 பேர் வரை இறந்து விட்டதாகவும், பலர் கடும் காயங்களுடன் மருத்துவ மனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று அனைவரும் உயிருடன் மீட்கப்பட வேண்டுமென விரும்புகிறேன். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் முழு குணமடைந்து திரும்ப வேண்டும். அவர்களுக்கு எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையின் மிகப் பெரிய கட்டிட விபத்து இது எனச் சொல்லப்படுகிறது. விபத்துக்கான காரணத்தை நன்கு அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து, இதுபோன்ற அதிர்ச்சித் தரத்தக்க கொடும் சம்பவங்களை கட்டாயம் தவிர்த்திடத் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
விபத்தினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரண நிதி உதவி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications