திருவாரூர் புறப்பட்டு சென்றார் கருணாநிதி.. 2 நாள் தீவிரப் பிரச்சாரம்
சென்னை: தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ள திமுக தலைவர் கருணாநிதி இன்று ரயில் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் சென்றார். 2 நாட்கள் அங்கு தீவிரப் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுகிறார்.
திருவாரூர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் கருணாநிதி, ஏப்ரல் 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதன் பின்னர் தமிழக அளவில் சுற்றுப்பயணம் செய்தார்.

இந்த நிலையில் மீண்டும் இன்று மற்றும் நாளை அவர் திருவாரூரில் பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து ரயில் மூலம் திருவாரூர் புறப்பட்டுச் சென்றார். திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் அவருடன் உடன்சென்றனர்.
திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது இல்லத்தில் தங்கும் அவர் இன்று மற்றும் நாளை திருவாரூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கும் வேன் மூலம் சென்று பொதுமக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார்.
இன்று திருவாரூர் நகர் பகுதிகளிலும், நாளை ஒன்றிய பகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் சென்னை திரும்பும் கருணாநிதி, 14ம் தேதி சென்னையில் கடைசி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications