கருணாநிதிக்கு எதிராக களமிறக்கப்பட்ட 'விவசாயிகள் சங்கம்' மாசிலாமணி
சென்னை: திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட செயலரான மாசிலாமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக திமுக வேட்பாளராக கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நன்னிலம் ஆனைக்குப்பத்தைச் சேர்ந்தவர்.

குடவாசலுக்கு குட்பை
கடந்த தேர்தலில் கருணாநிதிக்கு எதிராக குடவாசல் ராஜேந்திரன் நிறுத்தப்பட்டார். ஆனால் திமுகவுடன் குடவாசல் ராஜேந்திரனுக்கு ரகசிய உறவு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் பன்னீசெல்வத்துக்கு இம்முறை ஜெயலலிதா வாய்ப்பு அளித்துள்ளார்.

திருவாரூருக்கு போராட்டம்
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் திருவாரூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிகளிஅ அனைத்து கட்சிகளுமே தங்களுக்கு வேண்டும் எனக் கோரியிருந்தன. கடைசியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது.

முத்தரசன் மறுப்பு
இங்கு கருணாநிதிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசனை நிறுத்த வேண்டும் என்று தா. பாண்டியன் உள்ளிட்டோர் நினைத்தனர். ஆனால் முத்தரசனோ தமக்கு விருப்பமில்லை எனக் கூறிவிட்டார். இதில் தா.பாண்டியன் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது.

மாசிலாமணி
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமை வாய்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாசிலாமணி திருவாரூர் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் பன்னீர்செல்வத்தைப் போல விவசாயிகள் பிரச்சனைக்காக போராடி வரும் மாசிலாமணியும் கருணாநிதிக்கு கடும் போட்டியாகத்தான் இருப்பார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications