என்னை தனிமைப்படுத்த துடிக்கிறார் கருணாநிதி... என் நேர்மை ஜெயிக்கும்: வைகோ
சென்னை: என்னை தனிமைப்படுத்த திமுக தலைவர் கருணாநிதி துடிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். தேர்தலுக்காக என் மீது மீண்டும் கூறப்பட்ட குற்றச்சாட்டும், காலத்தால் துடைக்கப்படும் என்றும் வைகோ கூறியுள்ளார்.
வேலூரில், கிழக்கு மாவட்டம், வேலூர் மாநகர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய வைகோவின் பேச்சில் அனல் பறந்தது.

கடந்த 1993இல் என் மீது கொலைப் பழி சுமத்தி திமுகவை விட்டு வெளியேற்றிய பழிச்சொல், காலத்தால் துடைக்கப்பட்டு விட்டது. தற்போது, தேர்தலுக்காக என் மீது மீண்டும் கூறப்பட்ட குற்றச்சாட்டும், காலத்தால் துடைக்கப்படும்.
எனது நேர்மை பற்றி திமுகவினர் பலருக்குத் தெரியும். 22 ஆண்டுகள் தலைநிமிர்ந்து நிற்பதற்கு தொண்டர்கள் தான் காரணம். திமுக தலைவர் கருணாநிதியிடம் எல்லாத் திறமைகள் இருந்தும், எம்.ஜி.ஆரிடம் தோற்றுப் போய் விட்டார்.
என்னைத் தனிமைப்படுத்த கருணாநிதி துடிக்கிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நான் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மதிமுகவை வளர்த்து வருகிறேன். எனது கவசமே நேர்மை தான்.
தற்போதைய அரசியல் தலைகீழாக மாறிவிட்டது. சிலர் விலகியதால் கட்சிக்கு பாதிப்பு இல்லை. சத்தியம் ஒரு நாள் ஜெயிக்கும். தமிழகத்தின் நலன் காக்க முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்னை உள்பட பல போராட்டங்களை மதிமுக நடத்தி வெற்றியும் கண்டுள்ளது என்றார் வைகோ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications