கருணாநிதியின் 91வது பிறந்த நாள்.. சென்னையில் உருவாகும் 'திருக்குவளை வீடு' மேடை!!
சென்னை: சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாள் விழாவையொட்டி அவரது திருக்குவளை வீடு போன்ற மேடை அமைக்கப்பட்டு வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் 91வது பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி வருகிறது. முன்னதாக ஜூன் 2-ந் தேதி திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் திமுகவின் லோக்சபா தேர்தல் தோல்வி குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.

அதற்கு அடுத்த நாள் கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. வழக்கம் போல இந்த ஆண்டும் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக தென் சென்னை மாவட்ட செயலர் ஜெ. அன்பழகன் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
அதில் மேடையை கருணாநிதியின் திருக்குவளவை வீடு தோற்றத்தில் அமைக்கவும் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கு முன்னர் ஒய்.எம்.சி. அரங்கில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் கோபாலபுரம் வீடு, அறிவாலயம் போன்ற மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இருப்பினும் திமுகவின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பிறந்த நாள் விழாவே வேண்டாம் என்ற முடிவில் கருணாநிதி இருந்துள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலர் பேராசிரியர் அன்பழகன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், ஜெ. அன்பழகன் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து கருணாநிதியை வலியுறுத்தியதில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளும் முதல் பிரமாண்ட விழா என்பதால் திமுக தொண்டர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் ஜூன் 3-ந் தேதிக்காக காத்திருக்கின்றனர்.
-
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications