என்னை கைது செய்ய சபாநாயகரிடம் அனுமதி பெற்றீரா?.. கருணாஸ் கேள்வி
Recommended Video

சென்னை: காவல் துறைக்கு கொலை மிரட்டல் விடுத்த கருணாஸ் திடீரென கைது செய்யப்பட்டார். அப்போது 307 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யும் அளவுக்கு நான் என்ன செய்து விட்டேன் என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திநகர் போலீஸ் துணை ஆணையர் அரவிந்தனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். மேலும் வன்முறையை தூண்டும் அளவுக்கு அவரது பேச்சு இருந்தது.
இதைத் தொடர்ந்து தான் காவல் துறையை ஒருமையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து கொண்டார். மேலும் இனி இது போல் பேசமாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உருவாகியிருக்குமா
மேலும் முதல்வரே நான் அடித்துவிடுவேன் என பயந்து 100 போலீஸாரை அழைத்து வருகிறார் என்றும் கூவத்தூரில் நான் இல்லாமல் அரசாங்கம் உருவாகியிருக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது செய்யலாம்
இதையடுத்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்து வந்தது.

சட்டபடி எதிர்கொள்வேன்
தற்போது அவரது சாலி கிராமம் வீட்டில் வைத்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இதற்கு அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் என் மீது போடப்பட்டுள்ள வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.

சட்டத்தை மதிப்பவன்
307 பிரிவின் கீழ் வழக்கு பதியும் அளவுக்கு நான் என்ன செய்துவிட்டேன். பேச்சுரிமைக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது. எம்எல்ஏ என்ற அடிப்படையில் சட்டத்தை மதிப்பவன் நான் என்று தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications