கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரிக்கு மட்டும் பெரும் பணம்.. சரவணன் #MLAsForSale

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா குரூப் மொத்தம் 3 எம்.எல்.ஏக்களுக்கு மட்டும்தான் பெரிய அளவில் பணம் கொடுத்ததாக சரவணன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

நடிகர் கருணாஸ், உ.தனியரசு, தமிமுன் அன்சாரிதான் அவர் குறிப்பிடும் அந்த மூன்று பேர். இவர்களுக்கு மட்டும் தலா ரூ. 10 கோடி பணம் தரப்பட்டதாக மதுரை தெற்கு அதிமுக எம்.எல்.ஏ. சரவணன் கூறியுள்ளார்.

Karunas and other 2 paid largest amount, says Saravanan

மற்றவர்களுக்கு தங்கம், ரூ. 2 கோடி, 4 கோடி, 6 கோடி என பணம் கைமாறியுள்ளதாக தெரிகிறது. மேற்கண்ட மூன்று பேரும் இரட்டை இலை சின்னத்தில் ஜெயித்த கூட்டணிக் கட்சியினர் ஆவர்.

இதில் கருணாஸ்தான் கிட்டத்தட்ட அனைத்து வேலைகளையும் சசிகலா கும்பலுக்கு செய்து கொடுத்ததாக அப்போதே பேசப்பட்டது. எம்.எல்.ஏக்களுக்கு டான்ஸ் பார்ட்டி முதல் பல விஷயங்களை இவர்தான் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறப்பட்டது நினைவிருக்கலாம்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madurai South ADMK MLA Saravnan has said that Karunaas, Taniyarasu and Tamimun Ansary were paid the largest amount by the Sasikala group.
Please Wait while comments are loading...