நான்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை தேர்வு செய்தேன்... மறுக்க முடியுமா?... கருணாஸ் கேள்வி
Recommended Video

சென்னை: நான்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை தேர்வு செய்தேன் என்பதை உங்களால் மறுக்க முடியுமா என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சாலிகிராமத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் 2009-ஆம் ஆண்டு சாலிகிராமத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்புக்கு தலைமை அலுவலகத்தை அமைத்தேன்.
2018-ஆம் ஆண்டு செய்தியாளர்கள் ஒட்டுமொத்தமாக வந்துள்ளீர்கள். காவல் துறை அதிகாரியை அவதூறாக பேசியது சரியா என கேட்கிறீர்கள். ஒரு சராசரி மக்கள் இந்த கேள்வியை ஊடகத்தை பார்த்து கேட்டால் கூட அவர்கள் அறியாமையில் கேட்டதாக எடுத்துக்கலாம்.

வீடியோவை பாருங்கள்
படித்த ஒரு ஊடகத்தின் நிருபராக இருக்கக் கூடிய நீங்கள் இப்படி ஒரு கேள்வியை கேட்டது எனக்கு வருத்தமாக இருக்கிறது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் முழு வீடியோவை கேட்டிருந்தால் இந்த கேள்வியை என்னிடம் கேட்க மாட்டீர்கள்.

தொண்டர்கள் மீதும் கிடையாது
47 நிமிடங்கள் நான் பேசியுள்ளேன். அந்த வீடியோவை முழுமையாக கேளுங்கள். கேட்டுவிட்டு இந்த கேள்வியை கேளுங்கள் நான் பதில் சொல்கிறேன். நான் 2009-ஆம் ஆண்டு முதல் அமைப்பு நடத்தி வருகிறேன். ஒரு 75 வழக்கு கூட வாங்கினது கிடையாது. என் தொண்டர்கள் மீதும் எந்த வழக்கும் இல்லை.

மனைவியிடம் வருந்தினேன்
இதை நான் ஊக்குவித்ததும் கிடையாது. இத்தனை வருடங்களாக பொதுக் கூட்டங்களை பேசி வருகிறேன். என்றைக்கும் ஒரு ஜாதிக்கு எதிராக கருத்து சொன்னது கிடையாது. இதுவரை எந்த கூட்டத்திலும் நான் ஒருமையிலும் பேசியது இல்லை. வள்ளுவர் கோட்டத்தில் நான் பேசியதற்காக என் மனைவியிடம் நான் வருத்தம் தெரிவித்தேன்.

நிர்பந்திக்கவில்லை
என்னமோ என்னை அறியாமல் நான் ஒருமையில் பேசிவிட்டேன் என வருந்தினேன். என்னை யாரும் வருத்தம் தெரிவிக்க நிர்பந்திக்கவில்லை. நானாகவே தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டேன். அந்த அளவுக்கு இந்த சமுதாயத்தில் ஒரு நடிகனாக , இசையமைப்பாளராக , தயாரிப்பாளராக, சட்டமன்ற உறுப்பினர் எனக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன.

புகாருக்கு நடவடிக்கை இல்லை
திட்டமிட்டு ஒரு அதிகாரி செய்யற தப்பை ஏன் அத்தனை அதிகாரிகளும் ஊக்குவிக்கிறார்கள். தவறு செய்த அதிகாரி மீது தண்டிக்காதது ஏன், உள்துறை செயலாளர் வரை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்.

கருணாஸ் கேள்வி
கூவத்தூர் விவகாரம் குறித்து தேவைப்பட்டால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தெரிவிப்பேன். சாதாரண தலைவர்களுக்கு இருக்கும் பாதுகாப்பு கூட எனக்கு வழங்கவில்லை. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை நான்தான் தேர்ந்தெடுத்தேன் என்று சொல்றேன். அதில் ஏதாவது தப்பு சொல்வீர்களா. நான்தான் ஓட்டு போட்டேன்ல்ல என்று கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications