கருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்க எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை!
எம்எல்ஏ கருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
சென்னை: எம்எல்ஏ கருணாஸின் டூ வீலர் ஆர்சி புக்கை ஒப்படைக்குமாறு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் குறித்து அவதூறு பேசியது தொடர்பாக எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவருமான கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது போலீஸ். அதே நேரத்தில் ஜாமீன் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் கருணாஸ்.

2 புதிய வழக்குகள்
இந்நிலையில் கருணாஸை காவலில் விசாரிக்க அனுமதி மறுத்த நீதிமன்றம் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது. இதனிடையே ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக தொடர்பாக 2 வழக்குகளில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கைது செய்யப்பட்டார் கருணாஸ்.
[40 கைது.. 7 நாள் கலவரம்.. உ.பி மாநில பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய சிறுவர்களின் கிரிக்கெட் சண்டை! ]

7 நாள் ஜெயில்
இந்த வழக்கிலும் கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது போலீஸ். அதில் கொலை முயற்சி வழக்கை ரத்து செய்த நீதிமன்றம் தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் 7 நாள் நீதிமன்ற காவல் விதித்தது.

நிபந்தனை ஜாமீன்
இதைத்தொடர்ந்து இன்று காலை மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருணாஸுக்கு முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

2 பேர் உத்தரவாதம்
ஜாமீன் பெற்றுள்ள கருணாஸ் 50000 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என்றும், இரண்டு பேர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

டூ வீலர் ஆர்சி புக் நகல்
மேலும் கருணாஸ் தனது இருசக்கர வாகனத்தின் ஆர்சி புக் நகலை கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் இவ்வழக்கை விசாரிக்கும் அதிகாரி முன் 30 நாள் தினமும் கையெழுத்து இட வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications