கருணாஸ் மனைவிக்கு திடீர் நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி
நடிகர் கருணாஸ் மனைவி கிரேஸ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: நடிகரும் திருவாடனை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.,வுமான கருணாசின் மனைவி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் சசிகலா அணி எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்ததால் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகினார். சசிகலாவையும் அவரது அணியையும் எதிர்த்த பொதுமக்கள் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரையும் கடுமையாக விமர்சித்தனர். அந்த வகையில் திருவாடனை தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற கருணாஸை தொகுதிக்குள் வரக்கூடாது என்று பொதுமக்கள் எச்சரித்தனர்.

அதுமட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட் செய்து எல்லோரையும் கலாய்த்து தள்ளினர். மேலும் சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
அதில் கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரையும் தயாரித்து இணையத்தில் வெளியிட்டனர். கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த கருணாஸின் மனைவி மிகுந்த வேதனை அடைந்துள்ளார். வாட்ஸ் அப்பில் வேகமாக பரவிய கருணாஸின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்த அவரது மனைவிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிச்சை எடுத்துவருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications