38 மாத ஊதியம் ஏழைகளுக்கு.. 39வது ஊதியத்தை ஜெ. விடுதலைக்காக பாலாபிஷேகத்திற்கு செலவழித்த எம்.எல்.ஏ.!
கரூர்: கடந்த 38 மாதமாக தனது மாதாந்திர ஊதியத்தை ஏழைகளின் நலனுக்காக செலவிட்டு வந்த கரூர் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ காமராஜ், தற்போது 39வது மாத ஊதியத்தை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலைக்காக சிறப்புயாகம் மற்றும் பாலாபிஷேகத்திற்காக செலவிட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவர் காமராஜ். இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதிலிருந்து இவர் பெறும் சட்டமன்ற உறுப்பினருக்கான மாதசம்பளத்தை ஒவ்வொரு மாதமும் கரூர் மாவட்டதிற்குட்பட்ட பகுதியில் பாதிக்கபட்ட ஏழை எளிய மாணவர்கள், கட்சியில் மூத்த உறுப்பினர்கள், மாநிலத்தில் முதலிடம் படித்த ஏழை மாணவனின் மருத்துவபடிப்புக்கு ஊக்கநிதி, மனநலம் பாதித்த குழந்தைகளுக்கான உதவி என ஒவ்வொரு மாதமும் வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து தமிழக முழுவதும் அவரை விடுதலை செய்யகோரி பல்வேறு அறப்போராட்டங்கள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இன்று தனது 39ஆவது மாத ஊதியத்தை கரூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு பாலமலை சுப்ரமணியசுவாமி திருக்கோவிலில் 1008 லிட்டர் பாலாபிஷேகமும், ஸ்ரீ சத்ரு சம்ஹார திரிசதி சிறப்பு யாகமும் செய்து அவரை விடுதலை அடைய வேண்டி மனமுருகி வழிபட்டார் காமராஜ்.

இந்த நிகழ்ச்சியில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications