கீழ இறங்கு..வெளியே வா! தப்பா பேசுவியா? ஜோதிமணியை வழிமறித்த அதிமுக மாஜி எம்எல்ஏ உறவுகள்- பரபர வீடியோ!
வேடசந்தூர்: கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி எம்பி வேடசந்தூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பிரசாரம் செய்த போது அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் விபிபி பரமசிவத்தின் உறவினர்கள் ஜோதிமணி எம்பியின் காரை மறித்து ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஜோதிமணி நேற்று சூறாவளி பிரசாரம் செய்தார். வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. காந்திராஜனும் உடன் சென்றார்.

வேடசந்தூர் குக்கிராமங்களில் பிரசாரம் செய்துவிட்டு திரும்பிய ஜோதிமணியின் கார் இரவு நேரத்தில் திடீரென ஒரு கிராமத்தில் வழி மறிக்கப்பட்டது. ஒரு இளம் பெண் தலைமையில் வயதான சிலரும் காரை வழி மறித்து நின்றனர். ஏம்மா முதல்ல நீ கீழே இறங்கு.. காரை ஏத்திடுவியா.. ஏத்து பார்க்கலாம்..பிரசாரம் செய்.. ஓட்டு கேளு.. வேணாம்னா சொல்றோம்.. அதுக்கு எங்க அண்ணனை (வேடசந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் விபிபி பரமசிவம்) தப்பா பேசுற.. எதுக்கு எங்க அண்ணனை தப்பா பேசுற என அந்த இளம் பெண் ஆவேசமாகவும் சரமாரியாகவும் கேள்வி கேட்டு கொண்டே இருந்தார்.
அப்போது ஜோதிமணி காரில் பின்னால் வந்த வேடசந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ காந்திராஜன் இறங்கி, இளம் பெண் உட்பட பெரியவர்களை சமாதானப்படுத்தினார். அப்போதும் ஆவேசம் அடங்காத அந்த இளம் பெண் எம்.எல்.ஏ. காந்திராஜனை நோக்கி, பெரியப்பா.. அந்த அம்மா கிட்ட சொல்லி வையுங்க.. எதுக்கு எங்க அண்ணனை பத்தி தப்பா பேசுது.. இவங்க ஓட்டுகேட்டு போயிடுவாங்க.. நல்லது கெட்டதுக்கு எங்க அண்ணதானே வந்து நிக்குது.. ஓட்டுன்னா ஓட்டு மட்டும் கேட்கனும்.. தப்பா எதுக்கு பேசனும்? என ஆவேசம் குறையாமல் கேட்டுக் கொண்டே இருந்தார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் விபிபி பரமசிவம், சிட்டிங் திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன் இருவரும் உறவினர்கள்தான். ஜோதிமணியின் காரை வழிமறித்த பெண்ணும் இருவருக்கும் உறவினர்தான். அதனால் உறவு முறையில் காந்திராஜனிடம் பெரியப்பா என்றும் பரமசிவத்தை அண்ணன் என்றும் அழைத்து ஜோதிமணியிடம் மல்லுக்கட்டி இருக்கிறாராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications