ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு கோரி ஜவுளித்துறையினர் வேலை நிறுத்தம்- வீடியோ

ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரி கரூர் ஜவுளித்துறையினர் 6 நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

கரூர்: ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 6 நாட்கள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த கரூர் ஜவுளி சங்கத்தினர் நேற்றிலிருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. இது அவசரகதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், கரூர் ஜவுளி சங்கம் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் ஜிஎஸ்டி வரியிலிருந்து ஜவுளித்துறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கூறி கோரிக்கை விடுத்தனர். ஆனால், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளாததால் மத்திய அமைச்சர்களிடமும் ஜிஎஸ்டி நிலைக்குழுவினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

அதனையடுத்து, 6 நாட்கள் ஜவுளி நிறுவங்களை அடைத்து வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்றிலிருந்து தொடர்ந்து 6 நாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இதற்காவது மத்திய அரசு செவி சாய்க்குமா? என்பது கேள்விக்குறியே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+