கொசுக்களே இருக்கீங்களா.. டார்ச் லைட் அடித்து சோதனையிட்ட கரூர் கலெக்டர்!
கரூர்: கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயந்தி, டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய டார்ச் லைட்டும் கையுமாக சோதனையில் ஈடுபட்டார்.
கரூர் மாவட்டம், கரூர் நகராட்சிக்குட்பட்ட தொழிற்பேட்டை, இந்திரா காலனி, சிலோன் காலனி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் உபயோகத்திற்காக வைக்கப்பட்டுள்ள நீர் நிலைகள் மற்றும் தொட்டிகளை வீடாக வீடாக இரவு என்று பாராமல் கரூர் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இரவு என்பதால் டார்ச் லைட் அடித்து கூட கொசுக்களை கண்காணித்தார். மேலும் பொதுமக்களுக்கு சுகாதாரம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தினார். சுகாதாரமற்ற தண்ணீரை வெளியேற்றியும், நல்ல தண்ணீரீல் கொசுக்கள் முட்டையிடாமல் இருக்க மருந்துகள் ஊற்றி கொசுக்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
பொதுமக்களுக்கு ஏதாவது சாதாரண காய்ச்சல் வந்தால் கூட அரசு மருத்துவமனைகளை நாடி சரியான சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். தங்களுடைய வசிப்படங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து தொற்று நோய்கள் வருவதை தவிர்த்து விழிப்புணர்வுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு குறித்து கரூர் அருகே உள்ள தளவாபளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற டெங்கு குறித்து 6 மாவட்ட கலெக்டர்கள் அடங்கிய கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த சோதனையில் கலெக்டர் ஜெயந்தி இறங்கியுள்ளார். மேலும், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள தோகைமலை பகுதியில் அபி என்ற சிறுமி டெங்குவினால் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆங்காங்கே இது போன்ற சோதனையில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரவு என்றும் பாராமல் டெங்கு கொசுக்களை டார்ச் லைட் அடித்து கண்காணித்த சம்பவம் கரூர் மாவட்ட மக்களிடையே ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications