செந்தில் பாலாஜிக்கு தொடர் குடைச்சல்... உறவினர் வீடுகளில் தொடரும் ரெய்டு- ஆவணங்கள் சிக்கின

எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் உறவினர்கள்,நண்பர்கள் வீடுகளில் ரெய்டு 3வது நாளாக நீடிக்கிறது. இதுவரை நடந்த சோதனையில் 3வது நாளாக நீடிக்கிறது.

Subscribe to Oneindia Tamil

கரூர்: அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள்.

டிடிவி தினகரனின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வீடு, அலுவலகம், மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வருமானவரித் துறையினர் கடந்த வியாழக்கிழமையன்று சோதனையை தொடங்கினர்.

கோவை வருமான வரித்துறை கூடுதல் இயக்குநர் செந்தில்குமார் தலைமையில் கோவை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, மதுரையைச் சேர்ந்த ஐம்பது வருமான வரித்துறை அதிகாரிகள் எட்டு அணிகளாக பிரிந்து இந்த சோதனையை மேற்கொண்டனர்.

13 இடங்களில் ரெய்டு

13 இடங்களில் ரெய்டு

சென்னை, கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட 13 இடங்களில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கிய சோதனையில் கருப்பு பணம் பதுக்கியதும், அதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததும் தெரிய வந்தது.

தொடரும் சோதனை

தொடரும் சோதனை

கரூரில் நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சொத்துக்களுக்கான கணக்கு வரவு செலவு முறையாக இல்லாததால் வருமான வரி சோதனை மேலும் சில நாட்களுக்கு நடைபெறும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

3வது நாளாக ரெய்டு

3வது நாளாக ரெய்டு

சனிக்கிழமையான இன்று 3வது நாளாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

ரகசிய விசாரணை

ரகசிய விசாரணை

நேற்று 8 இடங்களில் நடைபெற்ற சோதனை 6 இடங்களில் முடிவடைந்தது. மீதமுள்ள 2 இடங்களில் இன்று சோதனை தொடர்கிறது. மேலும் செந்தில் பாலாஜியின் நண்பரிடம் ரகசிய இடத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

செந்தில் பாலாஜி உறவினர்கள்

செந்தில் பாலாஜி உறவினர்கள்

செந்தில்பாலாஜி தம்பி அசோக்குமாருக்கு சொந்தமாக ஜவுளி தொழில் இருக்கிறது. ஆனால், அவரது வீட்டிலோ அல்லது கம்பெனிகளிலோ சோதனை நடைபெறவில்லை. செந்தில்பாலாஜி நேரடியாக சம்ம்மந்தப்பட்ட இடங்களிலும் ரெய்டு நடைபெறவில்லை. இது செந்தில் பாலாஜியை மிரட்டுவதற்காகவே நடைபெறும் சோதனை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+