ஜெ. உடல்நிலை பற்றி வதந்தி.. கரூரைச் சேர்ந்த 2 பேர் கைது.. கைதானவர்கள் எண்ணிக்கை 10 ஆனது

Subscribe to Oneindia Tamil

கரூர்: முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை குறித்து வதந்தி பரப்பியதாக கரூரைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அப்பல்லோ அறிக்கை வெளியிட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக அறிக்கை வெளியாகவில்லை. இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் உலா வரத் தொடங்கின.

karur man arrested spreading rumors about jayalalithaa

அதனைத் தொடர்ந்து வதந்திகளைக் கட்டுப்படுத்த, வதந்தி பரப்புவோர் மீது அதிரடி நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். அந்தவகையில், ஏற்கனவே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கரூர் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த இளங்கோவன் (வயது35), ராயனூரைச்சேர்ந்த அலெக்ஸ் டக்ளஸ் ( வயது 46) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரையும் சேர்த்து ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பியதாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+