மோடி முகமூடி அணிந்து தூய்மை இந்தியா பிரசாரத்தில் ஈடுபட்ட 1300 மாணவ, மாணவியர்!
கரூர்: கரூரில், 2020-ம் ஆண்டுக்குள் தூய்மையான இந்தியாவை உருவாக்குவதை வலியுறுத்தி, லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளியை சார்ந்த 1300 பள்ளி மாணவ-மாணவிகள் பிரதமர் மோடி உருவம் பதித்த முகமுடி அணிந்து சூளுரை ஏற்ற நிகழ்வு நடந்தது.
கடந்த அக்டோபர் 2 -ல் காந்திஜெயந்தி அன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை தூய்மை ஆக்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். இத்திட்டத்திற்கு நாடெங்கும் பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் ஆதரவு அளித்து பல்வேறு இடங்களை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கரூரில் உள்ள லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளியில் பயிலும் சுமார் 1300 மாணவ-மாணவிகள் பிரதமர் மோடி உருவம் பதித்த முகமுடி அணிந்து குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளி வளாகத்தில் அணிவகுத்து ஒன்று கூடினர். அப்போது பிரதமர் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பொது இடங்களில் குப்பைகளை போடமாட்டோம் என சத்திய பிரமாணம் செய்தனர்.
இது குறித்து பள்ளி ஆசிரியை ராஜேஸ்வரி கூறுகையில், தெருக்களிலும் சாலைகளிலும் குப்பைகளை கொட்டாமல் அதற்கென உரிய இடத்தில் குப்பைகளை கொட்டுவோம் என உறுதி மொழி ஏற்று பிரதமர் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர் குழந்தைகள் என்றார்.
இந்த நிகழ்ச்சியை, கரூர் லிட்டில் ஏஞ்சல்ஸ் ஆங்கில மேல்நிலை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications