பள்ளி மாணவி கொலைக்கு முக்கிய காரணமான டாஸ்மாக் கடை!
கரூர்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பள்ளி மாணவி வினிதா பாலியல் பலாத்காரம் செய்துகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு முக்கிய காரணம், அங்குள்ள டாஸ்மாக் கடை தான் என்றுபொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பள்ளி மாணவியான வினிதா, கடந்த சில நாட்களாக, கரூர் அருகே வீரராக்கியத்தில் உள்ள ஒருதனியார் கொசுவலை நிறுவனத்தில் தினக் கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி இரவு கிருஷ்ணராயபுரத்தில் இருந்து பிச்சம்பட்டிக்குசைக்கிளில் சென்றார்.
அப்போது, டாஸ்மாக் கடை அருகே மது அருந்தி போதையில் இருந்த சில இளைஞர்கள் வினிதாவை மடக்கிப் பிடித்து அவரை வெற்றிலை கொடிக்கால் தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும், வினிதாவின் சுடிதார் துப்பட்டா மூலமே அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து,உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த கொலைக்கு அங்கு செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை தான் முக்கிய காரணம் என அப் பகுதி பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கிருஷ்ணராயபுரத்தில் இருந்து பிச்சம்பட்டிக்கு செல்லும் வழியில், கிருஷ்ணராயபுரம் நகரின் கடைசி பகுதியில், அதுவும் காட்டு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகின்றது.
இங்கு மது அருந்துபவர்கள் மூலம், ரோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் செல்ல முடியாதஅளவு தொல்லை தருகின்றனர். மேலும், அந்த இடத்தில் மது கடை இருந்தால், பெண்கள் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து என பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் அப் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த இடத்தில் இருந்து டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அசைந்து கொடுக்கவில்லை.
எனவே, அந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி பொது மக்களும், சமுக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications
