சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடியுடன் கேரளா முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு!
சென்னை வந்துள்ள கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமை செயலகம் சென்று அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கேரளா முதல்வர் பினராயி விஜயன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தப்படும் மாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க கேரளா முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வரவேற்பு அளித்தார்.

இதைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் சென்ற பினராயி விஜயன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பினராயி விஜயன், முல்லைப் பெரியார் அணை உட்பட இரு மாநிலங்களிடையேயான பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் பேசித் தீர்ப்போம். தமிழக, கேரளா மாநில மக்கள் சகோதர சகோதரிகள் என்பதால் அதிகாரிகள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications