பஸ் ஊழியர்கள் போராட்டம் எதிரொலி... எல்லையில் நிறுத்தப்பட்ட கேரளா பேருந்துக்கள்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கேரளாவிலிருந்து வந்த பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன.

தென்காசியிலிருந்து ஆலங்குளம் செல்லும் அரசு 34 இ.என்ற எண்ணுள்ள பேருந்து.நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தது.

Kerala govt buses stopped at borders

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் நள்ளிரவில் 4 பேருந்துகள் மீது கல்வீசி தாக்கியதில் கண்ணாடிகள் உடைந்தது. கன்னியாகுமரியில் 10 பேருந்துகள் மீதும் தென்காசியில் 2 பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடந்திருக்கின்றன.

அனைத்து அரசு பேருந்து பணிமனைகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து தமிழகம் வரும் பேருந்துக்கள் அந்தந்த மாவட்ட எல்லைகளில் நிறுத்தப்பட்டுள்ளன.

Kerala govt buses stopped at borders

கொல்லம், திருவனந்தபுரம், கோட்டயம்,ஆகிய பகுதிகளில் இருந்து தமிழக எல்லைப் பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசி வரும் பேருந்துக்கள் கோட்டை வாசல் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக செங்கோட்டை பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது.

எதிர்கட்சி தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டம் என்றாலும்,ஆளும் கட்சியின் எ.டி.பி.என்றழைக்கப்படும் அண்ணா தொழிற்சங்கத்தின் தொழிலாளர்கள் பேருந்தை நிறுத்தாமல் இயக்க முயற்சிப்பார்கள். ஆனால் பல ஊர்களில் அவர்களும் மறைமுகமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனராம். நேற்றுவரை பணிக்கு வருவதாக சொன்னவர்கள் தங்களது அலைபேசியை அனைத்து வைத்துள்ளனர் என்றும் ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தினர் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

Kerala govt buses stopped at borders

கிராமப்புறப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டாலும், வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துக்கள் இயக்கம் தற்ப்போது வரைத் தொடங்காததால் வாரத்தில் முதல்நாள், வருடக்கடைசி நாட்கள் என்பதால் அரசு, தனியார் பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், அதிகாரிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

எராளமானபயணிகள் ரயிலை பிடித்து பணிக்கு சென்றவண்ணம் உள்ளனர். தனியார் பேருந்துக்கள் தாரளமாக இயக்கப்படுவதால் நிலைமை பாதிப்பில்லாமல் உள்ளது. இந்த போராட்டங்கள் காரணமாக ஆட்டோ, வேன், கார்களுக்கு தற்போது கிராக்கி ஏற்ப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+