முல்லைப் பெரியாறு அணையில் தொடரும் கெடுபிடி- கேரளா போலீசுக்கு எதிராக தமிழக அதிகாரிகள் போராட்டம்
கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தங்களிடம் கேரளா போலீசார் கெடுபிடி காட்டுவதாக கூறி தமிழக அதிகாரிகள் நேற்று அங்கு போராட்டம் நடத்தியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 141.65 அடியாக உள்ளது. அங்குள்ள தமிழக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி பொறியாளர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியது முதல் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைப் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கி நீர்மட்ட நிலவரம், உபரிநீர் வெளியேற்றம் ஆகியவற்றை கண்காணித்து வருகின்றனர்.
அந்த குடியிருப்புக்கு குடும்பத்தினரையும் தமிழக அதிகாரிகள் அழைத்து சென்றதற்கு கேரளா போலீஸ் கடும் கெடுபிடி காட்டியது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக உதவி செயற்பொறியார் சவுந்தரம், உதவிப் பொறியாளர்கள் குமார், ஜெகதீஷ் மற்றும் ஊழியர்கள் தரையில் அமர்ந்து கேரள போலீசுக்கு எதிராக முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழக அதிகாரிகளின் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications