For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்மூர் பெண்கள் மட்டும் குறைந்தவர்களா? ஜிமிக்கி டான்சை அலற விடும் ஆட்டம் பாருங்க!

கேரள ஜிமிக்கி டேன்ஸ்க்கு தமிழக பறை நடனம் எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: வலைதளங்களில் ஓணம் பண்டிகையின் போது கேரள பெண்கள் ஆடிய 'ஜிமிக்கி டான்ஸ்'க்கு எங்க ஊர் பெண்கள் குறைந்தவர்களல்ல என்று சொல்லி, பறை இசைத்து ஆடும் பெண்கள் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அப்பண்டிகையின் போது காதில் பெரிய ஜிமிக்கியும் கேரளா சேலையும் கட்டி பெண்கள் மிக நளினமாக நடனம் ஆடியிருப்பார்கள்.

அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மீம்ஸ்கள்

மீம்ஸ்கள்

எம் கேரளப் பெண்டீரின் ஜிமிக்க்கி டேன்ஸ் கண்டீரோ என்று வலைதளங்களில் அப்பெண்கள் ஆட்டம் பிரபலமாகி வருகிறது. அதை வைத்து மீம்ஸ் உருவாக்கி வருவோரும் உண்டு. டான்ஸ்சுக்காக இந்த கூட்டமா அல்லது அதில் ஆடும் பெண்களின் அழகில் மயங்கிய கூட்டமா என்பது வாதத்திற்கு உரியது.

ஆட்டம்

ஆட்டம்

ஆனால் இதைப் பார்த்த நம் தமிழ்நாட்டு இளைஞர்கள், 'கேரளத்துக்கு தமிழகம் கொஞ்சங்கூட சளைத்தது அல்ல' என்று கூறி, தமிழ்நாட்டுப் பெண்கள் பறை இசைத்து, ஆடும் வீடியோவை பதிவேற்றி வருகிறார்கள்.

வைரல் வீடியோ

நம்ம ஊர் பொண்ணுங்க பெர்பாமன்ஸ் கேட்கிறவர்களுக்கு எனக் கூறி, தமிழ் பெண்கள் ஆடும் வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். அந்த வீடியோவை பார்த்தால் தெரியும், என்னா டான்ஸ் என்பது..

எங்ககிட்டயும் இருக்காங்க

எங்ககிட்டயும் இருக்காங்க

சிலர் இது ஆந்திர பெண்கள் என்றும் கூறுகிறார்கள். எது எப்படியோ, கேரள பெண்களுக்கு போட்டியாக, கைவசம் நம்மகிட்டயும் ஆட்கள் இருக்காங்கப்பு, என்று கெத்தாக சுற்றி வருகிறார்கள் நமது நெட்டிசன்கள். நீங்களும் அந்த அசத்தல் ஆட்டத்தை பாருங்க.

English summary
In internet Kerala Dance versus tamil girls dance video going viral
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X