மச்சினிச்சியின் திருமணம் பிடிக்கவில்லை.. மாப்பிள்ளை வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய அக்காள் கணவர்
சென்னை திருவல்லிக்கேணியில் மனைவியின் தங்கை திருமணத்தை நிறுத்துவதற்காக அக்காள் கணவர் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சென்னை: திருவல்லிக்கேணியில் மனைவியின் தங்கை திருமணத்தை நிறுத்துவதற்காக அக்காள் கணவர் மணமகன் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் அப்துல் காதர். தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு எழும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன.

பயங்கர சத்தம்
இந்நிலையில் இன்று அதிகாலை காதரின் வீட்டு வாசலில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர்.

மண்ணெண்ணெய் குண்டு
அப்போது மர்மநபர் ஒருவர் மண்ணெண்ணெய் குண்டை வீசி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீஸில் புகார் அளித்தனர்.

அக்காள் கணவர்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மணப்பெண்ணின் அக்காள் கணவர் மொகைதீன் மண்ணெண்ணெய் குண்டை வீசி செல்வது தெரியவந்தது.

திருமணத்தை தடுக்க
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் அக்காள் மற்றும் அவரது கணவருக்கு உடன்பாடில்லை என்றும் தெரியவந்துள்ளது. அவர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் நடைபெறுவதால் அதனை தடுக்க மண்ணெண்ணெய் குண்டை வீசியது தெரியவந்துள்ளது.

நிச்சயித்தப்படி திருமணம்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மொகைதீன் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர். மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதால் நாளை திருமணம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் நிச்சயித்தப்படி நாளை திருமணம் நடைபெறும் என இருவீட்டாரும் தெரிவித்துள்ளனர். ஆடிட்டர் வீட்டில் அதிகாலையில் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications