காங்கிரஸ் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: குஷ்பு பெயர் இல்லை !
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 33 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் குஷ்பு பெயர் இடம் பெறவில்லை.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதல்கட்டமாக 33 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் யார் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.
அ.தி.மு.க. சார்பில் ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி. நட்ராஜ் அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை போலீஸ் அதிகாரியாக இருந்த போது அவர் வசித்துள்ளார்.பணி ஓய்வு பெற்ற பின்னர், அ.தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். டி.என்.பி.எஸ்.சி. தலைவராகவும் நட்ராஜ் இருந்துள்ளார்.
ஓய்வு பெற்ற போலீஸ் ஒருவர், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால் மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் மூலம் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி சார்பில் இத்தொகுதியில் களம் இறங்கப்போவது யார்? என்கிற எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இதனிடையே இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு போட்டியிடுவார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனேனில் குஷ்பு வீடு இருப்பது மயிலாப்பூரில்தான்.
மேலும் குஷ்பு ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது. ஆனால் இன்று வெளியான 33 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலில் மயிலாப்பூர் தொகுதி இடம்பெறவில்லை. இதனால் குஷ்புக்கு எந்த தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications