சோனியா, ராகுலை சந்தித்து காங்கிரஸில் சேர்ந்தார் குஷ்பு!
டெல்லி: நடிகை குஷ்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை இன்று மாலை சந்தித்து அந்த கட்சியில் சேர்ந்தார். அப்போது கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடன் இருந்தார்.
திமுகவில் பரபரப்பாக இருந்த குஷ்பு தான் ஒதுக்கப்படுவதாகக் கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறினார். அதன் பிறகு அவர் அரசியலை பற்றி நினைக்காமல் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க பாஜக முயற்சி செய்வதாக செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குஷ்புவை சந்தித்து பேசியதாக கூறப்பட்டது.

பாஜக தவிர அதிமுகவும் குஷ்புவை தங்கள் கட்சியில் சேர்க்க ஆர்வமாக உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால் குஷ்புவோ தான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேரவில்லை. அவ்வாறு வந்த செய்தியில் உண்மை இல்லை. அதை எல்லாம் நம்பாதீர்கள் என்று ட்விட்டரில் தெரிவித்தார்.
இந்நிலையில் குஷ்பு டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை இன்று மாலை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். அப்போது கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடன் இருந்தார்.
இன்று காலை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
ஒரு முடிவு வாழ்க்கையை மாற்றக் கூடியதாக இருக்கலாம்... கவனமாக சிந்திக்கவும்... உங்களுக்கு சரி என்று பட்டால் முடிவை எடுத்துவிட்டு திரும்பிப் பார்க்க வேண்டாம். கருத்துகள் வேறுபடும் என்று தெரிவித்துள்ளார்.
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications