புதுச்சேரி ஆளுநராக "அதிரடி" கிரண் பேடி நியமனம்..!
புதுவை: புதுவையின் புதிய துணை நிலை ஆளுநராக நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குரிய கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் கிரண்பேடி. காந்தியவாதி அன்னா ஹசாரேவின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து போராடிய இவர், பின்னர் பாஜகவில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜகவின் முதல்வர் வேட்பாளராக கிரண்பேடி களமிறக்கப்பட்டார். கெஜ்ரிவால், கிரண்பேடி இருவருமே அன்னா ஹசாரேவின் இயக்கத்தில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். ஆனால், அத்தேர்தலில் பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சி அமைத்தது.
இந்நிலையில், தற்போது புதுவையில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடியை நியமிப்பதாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். கடந்தவாரம் தான் அங்கு சட்டசபைத் தேர்தல் முடிந்து புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில், அங்கு புதிய ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்தமான் நிக்கோபார் துணைநிலை ஆளுநர், ஏ.கே.சிங் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியையும் இதுவரை கவனித்து வந்தார்.
நேர்மைக்கு பேர் போன கிரண்பேடி டெல்லி போலீஸ் கமிஷனராக செயல்பட்டவர். இவரது காலத்தில்தான் டெல்லி திகார் சிறை சீரமைக்கப்பட்டது. திகார் சிறையில் நடந்த நல்ல மாற்றங்களை பாராட்டி அவருக்கு ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications