பூனைக்குட்டி வெளியே வந்தது... பாஜக தலைவர், பொருளாளரை எம்.எல்.ஏ.க்களாக பரிந்துரைத்த கிரண்பேடி!

பாஜக தலைவர், பொருளாளரை எம்.எல்.ஏக்களாக நியமிக்க புதுவை ஆளுநர் கிரண்பேடி பரிந்துரைத்திருப்பது புதிய சர்ச்சையாகி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

புதுவை: ஆளுநராக நியமிக்கப்பட்ட நாள் முதலே தனி ஒரு அரசாங்கத்தை நடத்தி வருகிறார் கிரண்பேடி. இப்போது புதுவை பாஜக தலைவர், பொருளாளரை எம்.எல்.ஏக்களாக பரிந்துரைத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

புதுவையில் மக்களாள் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசை எப்போதுமே ஆளுநர் கிரண்பேடி மதிப்பதே இல்லை.

நியமன எம்.எல்.ஏக்கள்

நியமன எம்.எல்.ஏக்கள்

அம்மாநிலத்தில் 3 பேரை எம்.எல்.ஏக்களாக அரசு நியமித்துக் கொள்ளலாம். புதுவை அரசு பதவி ஏற்று ஓராண்டாகிவிட்ட நிலையிலும் இதுவரை நியமனம் எம்.எல்.ஏக்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை.

நாராயணசாமி பரிந்துரை

நாராயணசாமி பரிந்துரை

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், ஜெயக்குமார் ரெட்டியார், தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ் ஆகியோரை புதுவையில் ஆளும் நாராயணசாமி தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கிரண்பேடியும் பரிந்துரை

கிரண்பேடியும் பரிந்துரை

ஆனால் இதற்கு முன்பாகவே தன்னிச்சையாக ஆளுநர் கிரண்பேடி பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன், பாரதிய ஜனதா பொருளாளர் சங்கர், தனியார் பள்ளி அதிபர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏக்களாக மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருக்கிறாராம் கிரண்பேடி. ஆளுநர் பரிந்துரைக்கும் நபர்களை எம்.எல்.ஏ.வாக நியமிக்க தடை கோரி காங்கிரஸ் கட்சி எம்.எல்ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு ஜூலை 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பூனைக்குட்டி வெளியே வந்தது

பூனைக்குட்டி வெளியே வந்தது

சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்காத நிலையில் மத்திய அரசு பாஜகவினரை எம்.எல்.ஏக்களாக நியமிக்கும் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தெரிகிறது. பாஜகவினரை கொல்லைப்புறமாக சட்டசபைக்குள் திணித்து தம்மை பாஜகவின் அதிதீவிர விசுவாசியாகவே அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஆளுநர் கிரண்பேடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+