சென்னையில் காற்றாடி மாஞ்சா நூலால் இறந்த சிறுவனின் தாய் தற்கொலை முயற்சி
சென்னை: சென்னையில் காற்றாடி மாஞ்சா நூலால் உயிரிழந்த சிறுவனின் தாய் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் குறிப்பாக வட சென்னையில் காற்றாடி பறக்க விடுவது அதிக அளவில் உள்ளது. இந்த காற்றாடி பறக்க விடுவது பல சமயங்களில் விபரீதத்தில் போய் முடிந்து விடுகிறது. காரணம், அந்த காற்றாடியில் கட்டப்படும் மாஞ்சா எனப்படும் கண்ணாடியால் ஆன கூழ் தடவப்பட்ட நூல்.

அப்படித்தான் கடந்த வாரம் பெரம்பூர் பகுதியில் தனது பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அஜய் என்ற 5 வயது சிறுவனின் கழுத்தை எங்கிருந்தோ வந்த காற்றாடியின் மாஞ்சா நூல் பலமாக அறுத்து விட்டது.
ரத்தம் சொட்டச் சொட்ட உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுவனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிறுவன் அஜய் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தான்.
இந்நிலையில் காற்றாடி மாஞ்சா நூலால் உயிரிழந்த சிறுவன் அஜயின் தாய் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தூக்க மாத்திரைகளை உட்கொண்ட அஜயின் தாயார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகன் உயிரிழந்த விரக்தியில் அந்த பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications