செழுமையான சங்க கால வாழ்வியலின் எச்சங்கள்தான் கீழடி...!
சென்னை: மதுரை அருகே உள்ள கீழடியில் கிடைத்த ஆதாரங்களில் இடைநிலையில் கிடைத்தவற்றில் இரண்டை மட்டுமே கார்பன் பரிசோதனைக்கு அனுப்பியதில் அது 2200 ஆண்டுகளுக்கும் முந்தியது என்கிற உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வெறும் 50 செண்ட் அளவில் தோண்டிப் பார்த்ததில் வெளிப்பட்ட பழந்தமிழரின் வைகைக்கரையில் வாழ்ந்த மனிதரின் நாகரிகம், இன்னும் உள்ள 150 ஏக்கர் நிலப்பரப்பிலும் ஆய்வு செய்தால் ஒரு மிகப்பெரிய தொல் நகரம் வெளிப்பட வாய்ப்புள்ளது. இந்திய வரலாற்றைத் தெற்கிலிருந்து புரட்டி எழுத வேண்டிய காலம் வந்துள்ளது...
[கீழடியில் புதைந்து கிடக்கும் தமிழர் வரலாறு.. ஒரு காட்சித் தொகுப்பு!]
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் இணைந்து சென்னையில் நடத்திய தமிழர் உரிமை மாநாட்டில் கீழடி குறித்த கண்காட்சி வைக்கப்பட்டது. அதற்காக ஸ்ரீரசா (இரவிக்குமார்) அவர்களால் தயார் செய்யப்பட்ட கீழடி குறித்த கண்காட்சித் தொகுப்பு நமது வாசகர்களுக்காக...!

தமிழர்களின் நகர நாகரீகம்
கீழடியில் கிடைத்துள்ள பல்வேறு பொருட்களையும் பார்க்கும்போது தமிழர்களின் நகர்ப்புற நாகரீகத்தின் செழுமை நமக்குப் புரிகிறது.

சங்ககால நாகரீகம்
சங்க காலத்தில் தமிழகத்தில் நகர நாகரீகம் செழிப்புற்று இருந்ததை மெய்ப்பித்துள்ளது கீழடி ஆய்வு.

மத்திய அரசின் நோக்கம்
2 ஆண்டு ஆய்வுக்குப் பின்னர் கீழடி ஆய்வை மத்திய அரசு நிறுத்தி வைத்த செயல் கடும் அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆதிச்சநல்லூர் என்னாச்சு
2005ம் ஆண்டு நடந்த ஆதிச்சநல்லூர் அகழாய்வும் இதுபோலத்தான். அதன் முடிவு இதுவரை வெளிவரவே இல்லை.

கார்பன் பகுப்பாய்வு
கீழடியில் கிடைத்துள்ள பொருட்களை முழுமையாக கார்பன் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் உண்மையான வயது தெரிய வரும். அமெரிக்காவின் பீட்டா அனலைசிஸ் நிறுவனம் இதைச் செய்கிறது.
Recommended Video


2 மட்டும் அனுப்பியது ஏன்
இருப்பினும் கீழடியில் கிடைத்த பொருட்களில் இரண்டை மட்டுமே ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். இது பாரபட்சமானது என்ற கருத்து எழுந்துள்ளது.

இரும்பு முதல் வரலாறு வரை
இரும்பு காலம் தொடங்கி வரலாற்றுக் காலம் வரை தொடர்ச்சியான ஆதராங்கள் கிடைக்குமிடமாக கீழடி உள்ளது.

குஜராத், ராஜஸ்தான் ஆய்வு
இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தானில் அடுத்த கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கி விட்டன. ஆனால் கீழடியில் மட்டும் இது தாமதப்படுத்தப்படுகிறது.

அமர்நாத் மாற்றம் ஏன்?
கீழடியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் மாற்றம் ஏன் என்பதை மத்திய அரசு விளக்கவில்லை இதுவரை.

நோக்கம் சரியா
நடந்து கொண்டிருக்கும் ஆய்வுக்கு அறிக்கை கேட்டு ஆய்வை நிறுத்தியுள்ளது தொல்லியல் துறை. இதற்கான நோக்கம் ஒன்றாக மட்டுமே இருக்க முடியும்.

கீழடியின் முக்கியத்துவம்
தமிழர் நாகரீகத்தின் அடையாளம் கீழடி. இங்கு கிடைததுள்ள பொருட்களில் மத அடையாளம் எதுவும் இல்லை. பெருமதங்கள் உருவாவதற்கு முன்பே சிறந்து விளங்கிய நாகரீகம்தான் தமிழ் நாகரீகம் என்பதை உணர முடியும்.

சமயசார்பற்ற மொழி தமிழ்
மொழியியல் அறிஞர் கால்டுவெல் கூட தமிழை சமயச் சார்பற்ற மொழி என்று மதிப்பீடு செய்துள்ளார். இதற்கும், கீழடி நாகரீகத்திற்கும் ஒற்றுமை இருப்பதை மறுக்க முடியாது.

கீழடைியப் பாதுகாப்பது அவசியம்
இங்கு கிடைத்துள்ள பொருட்களை மைசூருக்குக் கொண்டு செல்லக் கூடாது. கிடைத்த இடத்திலேயே கள அருங்காட்சியகம் அமைப்பதுதான் தமிழ்ச் சமூகத்தின் அர்த்தமிக்க வாழ்வியல் வரலாற்றுச் சாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக இருக்க முடியும்.

இல்லாத சரஸ்வதியைத் தேடி
இல்லாத சரஸ்வதி நதியைத் தேடி கோடிக்கணக்கில் செலவிடும் மத்திய அரசு கீழடியில் ஆய்வைத் தொடர மறுக்கிறது. இங்குள்ள பொருட்களை காலப் பகுப்பாய்வு செய்ய வெறும் ரூ. 1 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. இது நியாயமற்றது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.












Click it and Unblock the Notifications