பொழப்பே போயிரும்! இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால்.. கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல் : இ-பாஸ் முறைக்கு எதிராக கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஓட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சீசன் களைகட்டியுள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில், விடுமுறையை கழிக்க பலரும் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வரும் 7ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் இ-பாஸ் பதிவு செய்த பிறகே கொடைக்கானலுக்கு வர முடியும்.

Kodaikanal Hotel owners protests against the e-pass system

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை என்பதாலும், அக்னி நட்சத்திரம் தொடங்கி இருப்பதாலும் சுற்றுலாப் பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, தூண் பாறை, குணா குகை, மோயர் பாயின்ட் உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஆனால், வரும் மே 7ஆம் தேதி முதல், ஊட்டி, கொடைக்கானலுக்கு வாகனங்களில் வர இ - பாஸ் கட்டாயம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறையும் எனக் கூறப்படுகிறது. மே 7க்கு பிறகு கொடைக்கானலுக்கு வர இ-பாஸ் கட்டாயம் என்பதால் இந்த ஆண்டு கோடை விழாவில் சுற்றுலாப் பயணிகள் குறைந்தளவே வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இ-பாஸ் முறைக்கு கொடைக்கானலில் எதிர்ப்பு வலுத்துள்ளது. கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் இன்று அவசர ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து, இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறி ஆகிவிடும், இங்கு வாழும் மக்கள், வணிகர்கள் தவித்து வருகின்றனர். தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் கொடைக்கானலில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் கோடை சீசன் முழுவதும் மூடப்படும், சுற்றுலா பயணிகளுக்கு தங்க அறைகள் தர மாட்டோம், உணவு வழங்க மாட்டோம் என ஹோட்டல் உரிமையாளர்கள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இ பாஸ் முறையை செயல்படுத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், இ பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் ஹோட்டல்கள், விடுதிகள், கடைகள் காலவரையற்ற அடைப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக கொடைக்கானல் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர், சீசன் நேரத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+