கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்து சம்பவம்... பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு
சென்னை: சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் இருவர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.
கொடுங்கையூர் தீ விபத்தில் ஏற்கனவே ஏகராஜன் என்ற தீயணைப்பு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் 82 சதவீதம் தீக்காயங்களுடன் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிக்சை பிரிவில் இருந்த பரமானந்தம் என்பவர் நேற்று இரவு உயிரிழந்தார். இவர் கொடுங்கையூர் அப்பர் தெருவை சேர்ந்தவர், சம்பவத்தன்று வேடிக்கை பார்க்க சென்றபோது விபத்தில் சிக்கினார்.

அவரை தொடர்ந்து அதிகாலை அபிமன்யு என்பவரும் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. சென்னை கொடுங்கையூரில் உள்ள முருகன் என்ற சிப்ஸ் கடையில் கடந்த சனிக்கிழமை இரவு சிலிண்டர் ஒன்று திடீரென வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 7 போலீஸார் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications