மேட்டூர் அருகே சாலை விபத்தில் தம்பதி பலி- கொளத்தூர் மணி கார் மோதியதா? என விசாரணை
வாகன விபத்தில் தம்பதி பலியானதற்கு திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கார்தான் மோதியதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: மேட்டூர் அருகே திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் கார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பலியானதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூரில் இருந்து சேலத்துக்கு காரில் கொளத்தூர் மணி சென்று கொண்டிருந்தார். அப்போது சாத்தப்படி என்ற இடத்தில் கொளத்தூர் மணி கார் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற கோட்டகவுண்டன்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 46), விஜயா (வயது 40) ஆகியோர் மோதி உயிரிழந்தனர்.

இதனால் கொளத்தூர் மணியின் கார் மோதிதான் இந்த விபத்து ஏற்பட்டுவிட்டதாக தகவல்கள் பரவின. ஆனால் ராஜேந்திரன்-விஜயா தம்பதியினர் சென்ற இருசக்கர வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதியிருக்கிறது.
அதில் அவர்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டு தங்களது கார் மீது விழுந்து உயிரிழந்தனர் என போலீசாரிடம் கொளத்தூர் மணி விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் கொளத்தூர் மணியின் கார் மோதியே விபத்து நிகழ்ந்தது என போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரது கார் ஓட்டுநரை கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications