நீதிபதி கர்ணன் மாயம்.. ஏமாற்றத்துடன் சென்னை திரும்பிய கொல்கத்தா போலீஸ்
நீதிபதி கர்ணனை கைது செய்ய தடா சென்ற கொல்த்தா போலீசார் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்.
சென்னை: நீதிபதி கர்ணன் இருக்கும் இடம் தெரியாமல் தடாவில் திணறி வந்த கொல்கத்தா போலீசார் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கியது உச்சநீதிமன்றம். இதனையடுத்து சென்னையில் இருந்த கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் இன்று இங்கு வந்தனர். தமிழக போலீசாருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து நீதிபதி கர்ணன் நள்ளிரவே காளஹஸ்தி சென்று விட்டதாக தகவல் வெளியானதால் அவரைத்தேடி கொல்கத்தா போலீசார் ஆந்திர மாநிலம் காளஹஸ்த்தி புறப்பட்டுச் சென்றனர். நீதிபதி கர்ணனின் கார் ஓட்டுனர் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தினர்.
தடாவில் உள்ள காவல் நிலையத்திலும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். செல்போன் சிக்னலை வைத்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் நீதிபதி கர்ணன் இருக்கும் இடத்தை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து நீதிபதி கர்ணன் அப்பகுதியில் இல்லை என கூறியதை அடுத்து கொல்கத்தா போலீசார் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினர்
இதனிடையே சென்னை சூளைமேட்டில் உள்ள கர்ணனின் மகன் வீட்டிலும் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா?












Click it and Unblock the Notifications