உண்மைகள் வெளிவரும்..'கொம்பன்' தயாரிப்பாளர் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்: கிருஷ்ணசாமி
சென்னை: கொம்பன் பட பிரச்சினைக்காக என்மீது பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வழக்கு தொடர்ந்தால் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ஞானவேல் ராஜா தயாரிப்பில், முத்தய்யா இயக்கத்தில், கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளியான கொம்பன் திரைப்படத்தில், குறிப்பிட்ட ஜாதிகளை சீண்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி வழக்கு தொடர்ந்தார் கிருஷ்ணசாமி.
இதையடுத்து கோர்ட் பரிந்துரைபேரில் சில காட்சிகள் நீக்கம் செய்யப்பட்டு வந்த கொம்பன் படத்தில், ஜாதிய சீண்டல்கள் காட்சிகள் எதுவும் இல்லை.

இதனிடையே, தேவையில்லாமல் மன உளைச்சலுக்கு உள்ளாக்கிய, கிருஷ்ணசாமி மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று ஞானவேல் ராஜா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், கிருஷ்ணசாமி இதுகுறித்து கூறியதாவது: கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து 87 காட்சிகளை கட் செய்த பிறகு படம் வெளியிடப்பட்டது எனது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த காட்சிகள் இடம்பெற்றிருந்தால் ஜாதிய சீண்டல் இருந்திருக்கும்.
எப்போதெல்லாம், குறிப்பிட்ட ஜாதியை தூக்கிபிடித்து, வீரர்களாக காட்டி படங்கள் வருகிறதோ, அப்போது அந்த ஜாதியினரின் தாக்குதலுக்கும், வீரத்தை காண்பிக்கும் இடமாகவும் மாறுவது தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவு மக்கள்தான்.
என்மீது ஞானவேல் ராஜா வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயாராகவே உள்ளேன். அப்போதுதான் பல உண்மைகள் வெளிவரும். இந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் இருப்பதால், கூடுதல் விவரங்களை கூற முடியாது. இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications