மக்களின் மன ஓட்டத்தை பிரதிபலிக்கிறது கோவனின் பாடல்: ஜி.கே.நாகராஜ்
சென்னை: மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவனின் பாடல் மக்களின் மன ஓட்டத்தையே பிரதிபலிக்கிறது எனகொங்குநாடு ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

பாடலாசிரியர் கோவன் தமிழக அரசுக்கு எதிராகவும், மதுவின் தீமைகளையும் வலியுறுத்தி பாடல் மூலமாகவும், சாலையோர நடனங்கள் மூலமாகவும் மக்களிடம் கொண்டு சென்றுள்ள கருத்துக்கள், விமர்சனங்கள் முதல்வரின் மீதான தனிப்பட்ட விமர்சனத்தை தவிர்த்து, பாடலின் ஒவ்வொரு வரியும், வாக்கியமும் மதுவால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ண ஓட்டத்தையே பிரதிபலிக்கிறது.
தமிழக முதல்வர் மீதான தனிப்பட்ட விமர்சனங்களை அவர் பாடல்களில் நீக்கிவிட்டால், அவருடைய பாடல் வரிகள் தமிழகத்தின் தற்கால நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. மதுவால் ஏற்படும் தீமைகளை தாங்கிக்கொள்ள முடியாத உச்சகட்ட விரக்தி நிலைக்குச் சென்ற ஜனநாயகத்தின் மீதும்,தமிழக மக்களின் மீதும் அக்கறையுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளக்குமறலே இந்தப்பாடல்.
மீண்டும் மீண்டும் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி,மது விற்பதை நியாயப்படுத்துவதை விட்டு தமிழக மக்களின் உண்மையான மனக்குமறலை உணர்ந்து,தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டிய தருணம் இது''என்று கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications