முதல்ல இதை பாலோ பண்ணுங்க..விஜயின் TVK அரசுக்கு வெளிநாட்டு பொருளாதார நிபுணரின் முக்கிய எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கொரியாவின் சர்வதேச பொருளாதார கொள்கை நிறுவனத்தின் (KIEP) இந்தியா மற்றும் தெற்காசியா பிரிவுத் தலைவர் க்யுங்ஹூன் கிம் (Kyunghoon Kim) முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அவர் தமிழ்நாட்டின் அரசியல் பற்றி அதிகம் தெரியாது என்று குறிப்பிட்டாலும், புதிய அரசு பின்பற்ற வேண்டிய உத்திகள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இந்த ஆலோசனை தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்கள் கருதுகின்றன.

TVK Vijay Tamilnadu Economy politics kyung hoon kim advice to vijay tvk government economic warning tamil nadu economy management vijay cm new schemes caution kiep korea economist tamil nadu tamil nadu institutional continuity tvk popularity asset tamil nadu manufacturing hub vijay government policy continuity tamil nadu second largest economy new government early mistakes risk tamil nadu industrial projects momentum vijay tvk economic priority tamil nadu state institutions kyung hoon kim tamil nadu advice

புதிய திட்டங்களில் அவசரம் காட்ட வேண்டாம்

க்யுங்ஹூன் கிம், புதிய அரசு தனது அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் புரட்சிகரமான புதிய திட்டங்களை விரைவில் அறிவிக்க விரும்பும். ஆனால் இத்தகைய திட்டங்களை வடிவமைக்கும்போதும், செயல்படுத்தும்போதும் மிகுந்த கவனமும் திட்டமிடலும் தேவை என்று எச்சரித்தார்.

நீண்டகாலமாக ஆட்சியில் இருந்து வரும் அரசியல் கட்சிகளுக்கு புதிய திட்டத்தை செயல்படுத்துவதில் தவறுகள் ஏற்பட்டாலும் அவற்றைச் சமாளிக்க அனுபவமும், வலுவான அமைப்பு ரீதியான புரிதலும் இருக்கும். ஆனால் தவெக போன்ற புதிய கட்சிக்கு இத்தகைய அனுபவமும், விரிவான நெட்வொர்க்-ம் இல்லை.

தவெகவின் பலம் மற்றும் சவால்கள்

தற்போது தவெகவின் மிகப்பெரிய பலம் மக்களிடையே உள்ள பிரபலமும், செல்வாக்கும் தான். ஆனால் இந்தப் பிரபலத்தை நம்பி அரசு செயல்பட்டாலும், ஆரம்ப காலத்தில் ஏற்படும் சிறு தவறுகள் கூட மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும் நிலை உருவாகலாம் என்று க்யுங்ஹூன் கிம் எச்சரித்தார்.

மேலும், புதிய அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபணம் செயய் வேண்டிய கட்டாயம் உள்ளது. பெரும்பான்மை இல்லாத சூழலில் அரசியல் நிலையற்ற தன்மை உருவாகும், இதன் மூலம் மக்கள் விரைவில் நம்பிக்கை இழக்கும் அபத்தும் உள்ளது. அதனால் ஆரம்ப காலத்தில் தவறுகளைத் தவிர்ப்பது மிக முக்கியம்.

தமிழ்நாட்டின் உண்மையான பலம்

இந்தச் சூழலில் புதிய அரசு முதலில் செய்ய வேண்டிய முக்கிய வேலை என்னவென்றால், தமிழ்நாட்டின் மிகப்பெரிய சொத்தான அதன் பொருளாதாரத்தையும், நிறுவனங்களையும் சரியாகப் பயன்படுத்தி நிர்வகிப்பது தான் என்று க்யுங்ஹூன் கிம் வலியுறுத்துகிறார்.

தமிழ்நாடு இந்தியாவின் வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்று. இது இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகவும், முக்கிய தொழில் உற்பத்தி மையமாகவும் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல தொழில் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்கள் நீண்ட காலமாக செயல்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு வலுவான அரசு திட்டங்களின் ஆதரவும் உள்ளது.

தொடர்ச்சியான கொள்கைகள்

புதிய அரசு இந்தத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தினாலோ, அல்லது வேகமாக செயல்படுத்தி அதிக முதலீடுகளையும், வேலைவாய்ப்புகளை உருவாக்கினால் அவற்றின் வெற்றியை தனது சாதனையாகக் எளிதாக காட்ட முடியும் என்று கிம் சொல்கிறார்.

முதல் சில ஆண்டுகளில் தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு வெற்றிகள் புதிய அரசின் புதிய கொள்கைகளால் நடக்கது. முந்தைய கட்சிகளின் செயல்பாடுகளின் வாயிலாக தான் இருக்கும், இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். அதுவும் புது கட்சி என்பதால் இந்த காலம் கூடுதலாக இருக்கும்.

இத்தகைய நிலையில் தமிழ்நாட்டு அரசின் தற்போதைய 11 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சி 2026-27லும் தொடர்ந்தால் அதற்கு புதிய அரசே காரணமாக இருக்கும் என எளிதாக காட்ட முடியும். இது அரசுக்கு ஆரம்ப காலத்திலேயே வலுவான நம்பகத்தன்மையையும் மக்கள் ஆதரவையும் கொடுக்கும்.

கொள்கை தொடர்ச்சி அவசியம்

இத்தகைய வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் கொள்கை மற்றும் நிறுவன ரீதியான வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஈர்க்கும் முறையை அதிகரிப்பது தான் என்று க்யுங்ஹூன் கிம் வலியுறுத்துகிறார்.

தமிழ்நாட்டை அதன் உண்மையான சொத்தான பொருளாதாரத்தையும், நிறுவனங்களையும் முக்கியமானதாக கருதி முன்னெடுத்துச் செல்லுமாறு அவர் புதிய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆலோசனைகள் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+