மன்னார்குடி கோஷ்டிக்கு எதிராக கலகக் குரல்- கேபி முனுசாமிக்கு அதிமுகவில் பெருகும் ஆதரவு!
மன்னார்குடி கோஷ்டிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியுள்ள கேபி முனுசாமிக்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது.
சென்னை: அதிமுகவுக்கு உரிமை கொண்டாடும் மன்னார்குடி கோஷ்டிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வரும் முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமிக்கு ஆதரவு பெருகி வருகிறது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் கேபி முனுசாமிக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினர் சுவரொட்டி ஒட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை பாதுகாத்தவர்கள் நாங்கள்தான் என மன்னார்குடி திவாகரன் தஞ்சை நிகழ்ச்சியில் பேசினார். இதை ஆமோதிக்கும் வகையில் சசிகலா கணவர் நடராஜன், நாங்கள்தான் அதிமுகவை காப்பாற்றினோம். நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம் என்றெல்லாம் அலட்டினார்.

இதற்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். திவாகரன், நடராஜன் ஆகியோர் மீது அதிமுக பொதுச்செயலர் சசிகலா நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
சசிகலாவை தவிர்த்துவிட்டு மன்னார்குடி கோஷ்டியை மட்டும் எதிர்க்கும் கே.பி. முனுசாமியின் வியூகத்துக்கு அதிமுகவில் ஆதரவு பெருகி வருகிறது. இதனால் அதிர்ந்து போன மன்னார்குடி தரப்பு அமைச்சர்களை முனுசாமியிடம் தூது அனுப்பி பார்த்தது. ஆனால் முனுசாமியோ அவர்களை விரட்டியடித்துவிட்டார்.

தற்போது கே.பி. முனுசாமிக்கு ஆதரவு தெரிவித்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல இடங்களில் அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். நாளுக்கு நாள் கேபி முனுசாமிக்கு அதிகரித்து வரும் ஆதரவு மன்னார்குடி கோஷ்டியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications