லேடி போலீசுக்கே கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் - கிருஷ்ணகிரியில் கைது!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றுபவர் ஜோஸ்பின். இவர் பணியின் போது கிருஷ்ணகிரி நகரிலுள்ள பழையபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையோரமாக நின்றிருந்த இளைஞர் அந்த வழியாக சென்று கொண்டிருந்த பள்ளி மாணவிகளை கேலியும், கிண்டலும் செய்துள்ளார். இதைக் கண்ட காவலர் ஜோஸ்பின் அந்த இளைஞரை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்தாராம்.
அங்கிருந்து செல்ல மறுத்த அந்த இளைஞர், பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்து அவதூறாக பேசியுள்ளார். இதையடுத்து அந்த இளைஞரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் கிருஷ்ணகிரி பழையபேட்டை முத்தாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சதீஷ் என தெரியவந்தது.
இதனையடுத்து பெண் காவலர் ஜோஸ்பின் அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்துள்ளனர்.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்











Click it and Unblock the Notifications