செங்கல்பட்டில்.. ஆன்லைன் கடன் செயலியால் கிருஷ்ணகிரி இளைஞர் தற்கொலை.. பின்னணியில் பெரும் சோகம்
செங்கல்பட்டு: ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் செங்கல்பட்டு அருகே பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவரது தற்கொலை குறித்த சோகமான தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அதிர்ஷ்டத்தை நம்பி தமிழ்நாட்டில் பலரும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்களில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணத்தை இழப்போர் கடன் வாங்கியும் ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடுகின்றனர். இதில் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்து வேறுவழியின்றி 40க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு சட்டமசோதா நிறைவேற்றியது. முதல் மசோதாவை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய நிலையில் 2வது மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் விரைவில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விழுகிறது. மேலும் தடையை மீறுவோருக்கு அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்பட உள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்துக்கு இப்படி ஒரு தீர்வு காணப்பட உள்ள நிலையில் தான் ஆன்லைன் கடன் செயலிகள் சிலரது உயிர்களை பறிக்கின்றன. அதாவது ஆன்லைன் கடன் செயலியில் கடன் பெற்று அதனை மீண்டும் கட்ட முடியாமல் தவிக்கும் சிலர் தற்போது தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகிறது. தற்போது வெறும் 22 வயது இளைஞர் ஆன்லைன் கடன் செயலியால் தற்கொலை செய்துள்ளார். இந்த சோக சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் வசந்த். இவருக்கு 22 வயது ஆகிறது. வசந்த் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருந்தார். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பள்ளியகரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மேலும் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி தினமும் பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
இதுபற்றி அறிந்தவுடன் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி விசாரணை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரைண நடத்தினர். இந்த விசாரைணயின்போது அவர் தனது சிம்கார்டை உடைத்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக விடுதியில் தங்கியிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது வசந்த் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியிருந்ததும், அதனை செலுத்த முடியாமல் அவர் தவித்ததும் தெரியவந்தது. மேலும் குடும்பத்தினரிடம் இருந்து அவர் அடிக்கடி பணம் பெற்று வந்த நிலையில் தற்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
-
வெள்ளை அறிக்கை இல்ல.. வேஸ்ட் அறிக்கை! கோட்டையில் லெஃப்ட் ரைட் வாங்கிய சிஎம் விஜய்! பம்மிய ஆபீசர்ஸ்? -
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து.. 2வது தேசிய கீதத்துடன் தொடங்கியது தமிழக சட்டமன்ற கூட்டம்! -
முதலில் சங்கர் ஜிவால்.. இப்போது சுனில் குமார்.. தமிழக மாஜி டிஜிபிக்கள் அடுத்தடுத்து விலகல்! பின்னணி -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications