திடீர் உடல்நலக்குறைவு.. நெல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டாக்டர் கிருஷ்ணசாமி.. டிஸ்சார்ஜ்
நெல்லை: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி உடல்நலக் குறைவு காரணமாக நெல்லை தனியார் மருத்துவமனையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகலே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அண்மையில் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் புதிய தமிழகம் அக்கட்சியின் தலைவரான கிருஷ்ணசாமியும் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்தும் வந்தார்.

இந்த பணிகளுக்காக டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் தங்கி இருந்தார். இந்த நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கிருஷ்ணசாமி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா என்றும் சோதனை செய்யப்பட்டது.
மருத்துவர்கள் அவரை பரிசோதித்த நிலையில் அவருக்கு காய்ச்சல் மட்டும் இருப்பது தெரியவந்தது இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகல் உடல் நிலை தேறியதை அடுத்து கிருஷ்ணசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து நெல்லையில் இருந்து அவர் கோவை புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications