மின்சார உற்பத்திக்கு தயாராகும் கூடங்குளம் 2-வது அணு உலை!
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலை மின்சார உற்பத்திக்கு தயாராகி வருகிறது. இந்த அணு உலையில் அடுத்த வாரத்துக்குள் மின் உற்பத்திக்கான அணு பிளவு சோதனை நடத்தப்பட உள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலை கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி மின்சாரத்தை உற்பத்தி செய்ய தொடங்கியது.

முதன் முதலாக 160 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு அபிஷேகப்பட்டியில் உள்ள மின் தொகுப்பில் இணைக்கப்பட்டது. எனினும் பராமரிப்பு பணிக்காக அணு மின் உலை அவ்வப்போது நிறுத்தப்பட்டு பின்னர் இயக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி 22-ந் தேதி முதல் அணு உலை தொடர்ந்து இயங்கி வருகிறது. முதல் அணு உலை தொடர்ந்து இயங்கி வருவதை அடுத்து 2-வது அணு உலையிலும் மின்சார உற்பத்தியை தொடங்க கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி கடந்த மாதம் 18-ந் தேதி நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து உயர் வெப்ப அழுத்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை முடிவுகளை தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பாதுகாப்பு வால்வுகளை திறந்து நீராவியை வெளியேற்றும் சோதனை நடந்தது.
இந்த சோதனை 21-ந் தேதி காலை நிறைவடைந்தது. இதையடுத்து 2-வது அணு உலையில் அணு பிளவு சோதனை நடத்துவதற்காக இறுதி கட்ட பணியில் இந்திய-ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காக இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரியத்தின் அனுமதி எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அனுமதி கிடைத்தவுடன் 2-வது அணு உலையில் மின் உற்பத்திக்காக அணு பிளவு ஏற்படுத்தப்படும். இந்த மாத இறுதிக்குள் அணு பிளவு சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications