ஊருக்கு போறீங்களா மக்களே? கும்பகோணத்துக்கு வந்தது ஹேப்பி நியூஸ்.. தமிழக அரசின் அடுத்த அதிரடி பாருங்க
கும்பகோணம்: தமிழக போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இது கும்பகோணம் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.
தமிழகத்தில் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்.

இதற்காகவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது... ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும் இயக்கி வருகிறது.
சுபமுகூர்த்தம்: சமீபத்தில்கூட, ஆவணி சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு, அரசு போக்குவரத்துக் கழகம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. அது முடிந்ததுமே, ஓணம் பண்டிகை நெருங்கிவிட்டது.. பண்டிகை நேரத்தில், போக்குவரத்துகளில் அதிக கூட்டம் இருக்கும் என்பதால், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் தமிழக அரசு கூடுதல் பேருந்துகளை அறிவித்திருந்தது.
அதாவது, ஓணம் பண்டிகை + வார இறுதி நாட்கள் + சுப முகூர்த்த திருநாள் என மொத்தமாக 3 நாட்கள் 26, 27, 29ம் தேதிகளில் விடுமுறை நாளாக வந்தது.. அதனால், தமிழக அரசின் சிறப்பு பேருந்துகள், பொதுமக்களுக்கு பெருத்த நன்மையை தந்தது. கோவையிலிருந்து மட்டும் 70 சிறப்பு பஸ்கள் ஓனத்தை முன்னிட்டு இயக்கப்பட்டிருந்தன.
டபுள் ஹேப்பி: இப்போதும், வார விடுமுறை நெருங்கிவிட்டது.. வார விடுமுறை + முகூர்த்தநாள் என சேர்ந்து வருகிறது.. இந்த முறையும், பொதுமக்கள் விடுமுறையை கழிக்க, சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள்.. அதனால், கும்பகோணம் கோட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள், அதாவது, 8, 9ம் தேதிகள், மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
அதேபோல, திருச்சி, கும்பகோணம், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்புபேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications