• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாத்தா தாத்தா என அழைக்கும் பேரக்குழந்தைகள் எங்கே? கதறி அழும் அபிராமியின் தந்தை!

By Kalai Mathi
|
  கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளைக் கொன்ற அபிராமியின் தந்தை கண்ணீர் பேட்டி- வீடியோ

  சென்னை: குழந்தைகளை இப்படி கொடூரமாக கொலை செய்வாள் என கனவிலும் நினைக்கவில்லை என அபிராமியின் தந்தை கதறியுள்ளார்.

  பிரியாணி கடை ஊழியருடனான கள்ளக்காதலால் பெற்றக் குழந்தைகளை பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்தும் வாய் மற்றும் மூக்கை பொத்தி மூச்சை திணறடித்தும் கொடூரமாக கொலை செய்தார் குன்றத்தூரை சேர்ந்த அபிராமி.

  காதல் கணவரையும் கொலை செய்ய திட்டமிட்ட அபிராமி அதற்காக 12 மணி நேரம் காத்திருந்தார். ஆனால் கணவர் இரவு அலுவலகத்திலேயே தங்கி விட்டதால் தப்பித்தால் போதும் என கள்ளக்காதலன் சுந்தரத்தின் ஆலோசனைப்படி நாகர்கோவிலுக்கு தப்பினார். 

  தலைகுனிந்த தந்தை

  தலைகுனிந்த தந்தை

  கண்ணை மறைத்த காமவெறியால் இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமியின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தனது மகளின் இந்த கொடூர செயலால் வெட்கி தலைகுனிந்துள்ளார் அவரது தந்தை சவுந்தரராஜன்.

  அபிராமிக்காக வெளியேறினார்

  அபிராமிக்காக வெளியேறினார்

  அவர் கூறியிருப்பதாவது, விஜயை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்த அபிராமி அவரைதான் திருமணம் செய்வேன் என பிடிவாதமாக இருந்தார். இதனால் விஜய்க்கு அவரை திருமணம் செய்து வைத்தேன். கடைசி வரை விஜயின் பெற்றோர் ஒத்துக்கொள்ளாததால் அபிராமிக்காக விஜய் வீட்டை விட்டு வெளியேறினார்.

  தாய் என்பதை மறந்தால்

  தாய் என்பதை மறந்தால்

  அவர்களின் வாழ்க்கை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. இரண்டு குழந்தைகள் பிறந்தன. அபிராமிக்கு எப்பொழுதும் தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் ஆர்வம் அதிகம். தான் இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதையும் மறந்து, கணவன் சம்பாதிக்கும் பணத்தை, பியூட்டி பார்லருக்கு சென்று அலங்கரித்து கொள்வது, ஓட்டலுக்கு சென்று விதவிதமாக சாப்பிடுவது என்று உல்லாசமாக சுற்றத் தொடங்கினாள்.

  யார் சொல்லியும் அடங்கவில்லை

  யார் சொல்லியும் அடங்கவில்லை

  அதற்கு வசதியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவளது பிறந்த நாள் பரிசாக, கணவன் விஜய் ஆசையாக ஒரு ஸ்கூட்டி வாங்கிக் கொடுத்தான். அதில் இருந்துதான் அவளது போக்கு முற்றிலும் மாறத் தொடங்கியது. எப்பொழுதும் ஸ்கூட்டியிலேயே வலம் வரத் தொடங்கினாள். யார் சொல்லியும் அடங்கவில்லை.

  சுந்தரம் வீட்டில் தங்கிய அபிராமி

  சுந்தரம் வீட்டில் தங்கிய அபிராமி

  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, குன்றத்தூரில் உள்ள பிரபல பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்ட விஷயம் எங்களுக்கு தெரிந்தது. அவனை சந்திக்க அடிக்கடி சுந்தரம் வீட்டிற்கே சென்று வந்தாள். கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பகூட தனது இரண்டு பிள்ளைகளையும் தவிக்க விட்டுவிட்டு சுந்தரத்தின் வீட்டில் போய் இரண்டு நாட்கள் தங்கி விட்டாள்.

  துளிக்கூட கவலையில்லை

  துளிக்கூட கவலையில்லை

  அபிராமி-சுந்தரம் உறவு குறித்து எனக்கு தெரிய வந்தபோது, நான் சுந்தரத்தின் வீட்டிற்கு சென்று, அபிராமியை அடித்து உதைத்து, அறிவுரை கூறி, மீண்டும் கணவனுடனேயே சேர்த்து வைத்தேன். அப்போதே இதுகுறித்து புகார் அளித்திருந்தால் இப்போது எனது பேரப் பிள்ளைகள் இரண்டையும் இழந்து தவித்திருக்க மாட்டேன். எனக்கு இப்போது அபிராமியை பற்றித் துளிகூட கவலையில்லை. அவள் செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்கப் போகிறாள்.

  தாத்தா தாத்தா என...

  தாத்தா தாத்தா என...

  ஆனால் பேரப் பிள்ளைகளை நினைத்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இப்பொழுதும் எனது பேரப்பிள்ளைகள் இரண்டும் தாத்தா தாத்தா என்று என்னை அழைப்பது என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பெற்ற மகளே தனது இரண்டு குழந்தைகளையும் ஈவு இரக்கம் இல்லாமல் கொடூரமாக கொலை செய்வாள் என்று கனவிலும் நினைக்கவில்லை. அவளது பேராசை மற்றும் உல்லாசப் போக்கால்தான் இந்த அளவுக்கு கொடூர மனம் வந்து விட்டது. இவ்வாறு கதறுகிறார் அபிராமியின் தந்தை சவுந்தரராஜன்.

   
   
   
  English summary
  Kundrathur Abirami farther cries for losing his two grand children. Abirami Killed her two children for illicit love.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more