"போலீஸ் கஸ்டடிக்கு முகாந்திரம் இல்லை".. பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கிய குன்னம் நீதிமன்றம்
பெரம்பலூர்: மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கி குன்னம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்திருந்தார். மணிப்பூர் கலவரம் குறித்த பேட்டி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் இவர் கருத்து தெரிவித்திருந்ததாக தெரிகிறது.
இரு பிரிவினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் இவருடைய கருத்து இருந்ததால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் பத்ரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என தலைமை நீதிபதி சந்திர சூட் கூறியதற்கு பத்ரி அவதூறாக கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணிக்கு பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டார். அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு குன்னம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பத்ரியின் கைதுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ வானதி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் பத்ரி பேசியது தவறு தான் என்ற போதிலும் அவரை கைது செய்தது கருத்துரிமைக்கு எதிரானதாகிறது. எனவே அவரை விடுவிக்க வேண்டும் என எழுத்தாளர்கள் பலர் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் குன்னம் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் பத்ரி. அவருடைய ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பத்ரியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் என்றும் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் போலீஸ் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
அப்போது நீதிபதி , பத்ரியை போலீஸ் கஸ்டடியில் எடுக்க முகாந்திரம் இல்லை, அதற்கான தேவையும் இல்லை என கூறி காவல் துறையின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications